மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

கெளதம் மேனன் படத்தில் சிம்புவுடன் நடிக்கும் நயன்தாரா?

கெளதம் மேனன் படத்தில் சிம்புவுடன் நடிக்கும் நயன்தாரா?

இயக்குநர் கெளதம்மேனன் மற்றும் சிம்பு இருவருக்குமான கூட்டணி எப்போதுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதற்கு காரணம் 2010இல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா செய்த மேஜிக். அதன்பிறகு, 2016இல் அச்சம் என்பது மடமையடா படத்தினால் கிடைத்த ரெஸ்பான்ஸ்.

இந்த லாக்டவுனில்கூட த்ரிஷாவும் சிம்புவும் நடித்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கூட இணையத்தில் வைரலானது. இந்தநிலையில், கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் 'பத்துதல' படத்தில் கூட சிம்புவுக்கு வில்லனாக கெளதம்மேனன் நடிக்கிறார். இந்த நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

விடிவி 2வுக்காக ரசிகர்கள் வெறியோடு வெயிட்டிங்கில் இருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறது. ஆனால், வெளிவராத தகவல் என்னவென்றால், சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிம்புவுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்க சாத்தியம் இருக்கிறதா என்று கேட்டால் வாய்ப்பிருக்கிறது என்று பதில் வருகிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்க ஏற்கெனவே நயன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். ஆக, வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிம்பு படத்தில் இது சாத்தியமாகலாம் என்கிறார்கள்.

ஏற்கெனவே வல்லவன் மற்றும் இது நம்ம ஆளு படங்களில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கெளதம் இயக்கத்தில் நடித்தால் சிம்பு - நயன் நடிக்கும் மூன்றாவது படமாக இருக்கும். அதோடு, அடுக்கடுக்காக பல படங்களை கையில் வைத்திருக்கிறார் நயன்தாரா. குறிப்பாக, பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 30 ஜன 2021