மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

விடாது துரத்தும் முன்செய்த வினை... சக்ரா தள்ளிப்போக காரணம்!

விடாது துரத்தும் முன்செய்த வினை... சக்ரா தள்ளிப்போக காரணம்!

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் சக்ரா. விஷாலுக்கு நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடித்திருக்கிறார்கள். அதோடு, ஆர்மி அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர் முக்கிய கேரக்டரில் வருகிறார். படமும் முழுமையாக முடிந்து, ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

ஆரம்பத்தில் பெரும்தொகைக்கு ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது திரையரங்குகள் நார்மல் நிலைக்கு திரும்பியுள்ளதால், முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு, ஓடிடிக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார் விஷால். ஆக, பிப்ரவரி 12ஆம் தேதி சக்ரா வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது, மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போவதாக தகவல் பரவிவருகிறது.

காரணம், விஷால் நடிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் 2019இல் வெளியான படம் ஆக்‌ஷன். இந்தப் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்தப் பட தோல்விக்கு விஷால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஏற்கெனவே பேசி முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், அந்த தொகை இன்னும் செட்டில் ஆகவில்லை. இந்த நிலையில், தொகை கொடுக்கப்பட்டால்தான், விஷாலின் அடுத்தப் படம் வெளியாகும் எனும் சிக்கலில் சக்ரா சிக்கியுள்ளது. எப்படியும், பேசி சரி செய்துவிடுவார்கள் என நம்பலாம்.

விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படம் தயாராகிவருகிறது. சொல்லப்போனால், விஷால் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. ஏனெனில், இந்தப் படத்தின் பாதியிலேயே கருத்துவேறுபாட்டினால் படத்திலிருந்து விலகிவிட்டார் மிஷ்கின். அதனால், நடிப்போடு சேர்த்து இயக்கத்தையும் விஷால் கவனித்துவருகிறார். சக்ரா படத்தைத் தொடர்ந்து விஷாலுக்கு துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 30 ஜன 2021