மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஜன 2021

அஜித் வலிமை ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

அஜித் வலிமை ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. மாஸ்டர் வெளியாகிவிட்டதிலிருந்து அஜித் படத்தின் அப்டேட் ஒன்றொன்றாக கசிந்துவருகிறது. அப்படி, வலிமை படத்திலிருந்து மூன்று அப்டேட்ஸ் கிடைத்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவருகிறது வலிமை. படமானது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. இப்போது அஜித் அல்லாத காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது.

ஷூட்டிங் அப்டேட்

படக்குழுவுக்கு மீண்டும் அஜித் நடிக்க சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம். அதனால், பிப்ரவரியில் இரண்டொரு நாட்கள் தேதி கேட்டிருக்கிறது படக்குழு. அதோடு, ஏற்கெனவே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தார்கள். எந்த ஊர் என்பது உறுதியாகாமல் இருந்தது. இறுதியாக, ஸ்பெயின் நாட்டிற்குச் செல்வதை உறுதி செய்திருப்பதாகத் தெரிகிறது. கொரோனா லாக்டவுன் சிக்கல் காரணமாக ஏப்ரல் மாதம் ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறது வலிமை டீம்.

மியூசிக் அப்டேட்

வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஓபனிங் பாடலென்பது படத்திற்கு மிக முக்கியமான ஒன்று. ரசிகர்களின் கொண்டாட்டமாக ஓபனிங் பாடல்தான் இருக்கும். வலிமை படத்திற்கான இண்ட்ரோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறாராம். பாடலும் நன்றாக வந்திருப்பதாக தெரிவிக்கிறது நெருங்கிய வட்டாரம்.

ரிலீஸ் அப்டேட்

படத்தை அஜித் பிறந்த தின ஸ்பெஷலாக மே 1ஆம் தேதி வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தது படக்குழு. இப்போது, வெளிநாட்டு ஷூட்டிங்கிற்கே ஏப்ரலில் தான் செல்வதால், சொன்ன நேரத்தில் படம் முடியுமா என்பது சந்தேகமே. ஆக, வலிமை படமானது சுதந்திர தினத்தை குறிவைத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகலாம் என்று சொல்கிறார்கள். ஏப்ரலில் தான் நிறைய பெரிய ஹீரோக்களின் புதுப் படங்கள் வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட்டில் பெரிதாக புதுப்படங்கள் ரிலீஸ் குறித்து அறிவிப்பு இல்லை என்பதால், எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகலாம்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 29 ஜன 2021