மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஜன 2021

ஓடிடியில் மாஸ்டர்: பிரைம் வீடியோவில் இருக்கும் விஜய் பட லிஸ்ட்!

ஓடிடியில் மாஸ்டர்: பிரைம் வீடியோவில் இருக்கும் விஜய் பட லிஸ்ட்!

திரையரங்கில் வெளியான 17 நாட்களுக்குள் ஓடிடியில் வருகிறது விஜய் நடித்திருக்கும் மாஸ்டர். விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது மாஸ்டர்.

கல்லூரி பேராசிரியரான ஜேடி பணி மாற்றலாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களுக்குக் காரண காரணியாக வில்லன் பவானி இருக்கிறார். விஜய்சேதுபதி என்கிற பவானியுடன் மோதி, சிறுவர்களை காப்பாற்றும் விஜய் என்கிற ஜேடியின் ஆக்‌ஷன் மாஸ் கமர்ஷியல் கதையே மாஸ்டர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர், ஜனவரி 29ஆம் தேதியான இன்று முதல் பிரைம் வீடியோ ஓடிடி தளத்திற்கு வந்திருக்கிறது. சரி, மாஸ்டர் தவிர பிரைம் வீடியோவில் இருக்கும் மற்ற விஜய் படங்கள் என்னென்ன என்கிற பட்டியலையும் ஒரு சுற்றுப் பார்த்துவிடலாம்.

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் பிகில். 2019-ல் வெளியான இப்படம் செம ஹிட். பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும். பெரிய ஹீரோ என்கிற எண்ணம் இல்லாமல், சிங்கப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் விஜய்.

தெறி

விஜய் - அட்லீ மேஜிக் முதன்முதலாக இணைந்த படம் தெறி. சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் படத்தில் நடித்திருப்பார்கள். போலீஸ் அதிகாரியாக விஜய் ஜித்து கெத்து காட்டியிருக்கும் படம் தெறி.

தலைவா

2013-ல் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான படம் தலைவா. பல கட்டப் பிரச்னைகளைத் தாண்டி திரைக்கு வந்தது தலைவா. விஜய் அரசியலுக்கு வர இருப்பதற்கான முன்னோடியாக இப்படம் வெளியானதாகக் கூடப் பேசப்பட்டது. சத்யராஜ் முக்கிய ரோலில் நடித்திருப்பார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கூட செம ஹிட்டானது.

குருவி

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க மாஸ் கமர்ஷியல் படமாக வெளியானது குருவி. விஜய் - விவேக் காம்பினேஷனில் காமெடிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். படம் பெரிதாக போகவில்லை என்றாலும் பாடல்கள் செம ஹிட். திரையரங்கில் ஓடாத குருவி, டிவியில் ரெக்கை கட்டிப் பறந்தது.

சிவகாசி

லைட் வெயிட் திரைப்படங்களை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த விஜய்யை கமர்ஷியல் ஹீரோவாக்கிய திரைப்படம் சிவகாசி. பேரரசு இயக்கத்தில் விஜய்யுடன் அசின் நடித்திருப்பார். வில்லத்தனம் செய்யும் அண்ணன் முத்தப்பாவை போட்டு உருட்டி எடுக்கும் தம்பி சிவகாசியின் அதிரடி பட்டாஸே சிவகாசி.

திருமலை

விஜய் - ஜோதிகா காம்போவில் 2003ல் வெளியான மற்றுமொரு மாஸ் கமர்ஷியல் ஹீரோயிஸ சினிமா திருமலை. வித்யாசாகர் இசையில் பாடல்களும் செம மெலடி.

பகவதி

தம்பிக்காக டீ கடை ஓனரான பகவதி, பெரிய தாதாவாக மாறும் கேங்ஸ்டர் கதையே பகவதி. குட்டி பகவதியாக வடிவேலு செய்யும் அட்டகாசங்கள் ரகளையாக இருக்கும்.

யூத்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் மணிஷர்மா இசையில் 2002ல் வெளியான படம் யூத். விஜய்க்கு மிகப்பெரிய தோல்விப் படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஓடிடியில் கவனிப்பு இல்லாமல் கிடக்கிறது என்பதிலும் மாற்றமில்லை.

தமிழன்

ஒரு நல்ல ஸ்கிரிப்ட். நேர்மையான வழக்கறிஞரான விஜய் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்திருக்கும் களமே தமிழன். 2002ல் வெளியான இப்படம் தான் பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவின் முதல் படம். பிரியங்காவிற்காக ஒரு எட்டு பார்க்கலாம்...

குஷி

விஜய்க்கு வெறித்தனமான ஹிட் கொடுத்த படம் குஷி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் காதலும் சண்டையுமாக பட்டையைக் கிளப்பிய படம். ஈகோவை உடைத்தெறிந்து ஜெனியும் ஷிவாவும் காதலில் விழுந்த கதை.

ஒன்ஸ்மோர்

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், சிம்ரன், சிவாஜி நடிப்பில் வெளியான படம் ஒன்ஸ்மோர். காதல், காமெடி, கலாட்டா கொஞ்சம் செண்டிமெண்ட் என தேவா இசையில் படம் வெளியானது.

நேருக்கு நேர்

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா நடித்து வெளியான படம் நேருக்கு நேர். 1997 வெளியான இப்படத்தில் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். விஜய்க்கு ஜோடியாக கெளசல்யா நடித்திருப்பார். இதே கெளசல்யா தான் திருமலை படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக கொஞ்சம் ஓல்டு லேடியாக வருவார்.

ராஜாவின் பார்வையிலே

விஜய்யுடன் அஜித் இணைந்து நடித்து வெளியான படம் ராஜாவின் பார்வையிலே. 1995-ல் இப்படம் வெளியானது. கொஞ்சம் வித்தியாசமான களம். அஜித், விஜய் என இருவருமே அப்போது திரைக்கு வந்த இளம் நடிகர்கள். இருவரும் இணைந்து நடிப்பது அப்போது சாத்தியமாகிவிட்டது. இப்போது நடக்குமா? அஜித் - விஜய் இணைந்து நடிப்பார்களா? அப்படியான ஒன்று எதிர்காலத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றால், அஜித் - விஜய் சேர்ந்து நடித்த முதலும் கடைசியுமான படமாக ‘ராஜாவின் பார்வையிலே’ வரலாற்றில் இடம்பிடிக்கும்.

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 29 ஜன 2021