மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ! படம் என்ன ஜானர் ?

சிவகார்த்திகேயனின்  ‘டான்’ ! படம் என்ன ஜானர் ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் தற்பொழுது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கோலமாவு கோகிலா’ நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் படமும், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படங்களும் தயாராகிவருகிறது. இரண்டு படங்களுக்குமான படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. அனிருத் இசையில் டாக்டரும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படங்களின் இசைக் கோர்ப்பு பணிகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் டாக்டர் படம் ஏப்ரலில் வெளியாகிறது. இரண்டாவது, அயலான் படமானது கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், உடனடியாக அடுத்தப் படத்தை துவங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். நேற்றைய மின்னம்பலம் பதிப்பில் ‘சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட்’ எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் பிரேக் செய்தது போலவே, சிவகார்த்திகேயனை அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கும் தகவலை இன்று உறுதி செய்திருக்கிறது படக்குழு.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிக்க இருந்தார்.. அந்தப் படம் சில காரணங்களால் துவங்க முடியாமல் போனது. அந்தப் படத்துக்காக லைகா நிறுவனத்திற்கு கமிட்மெண்ட் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். இப்போது அந்த ஒப்பந்தத்திற்காக தான், லைகா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக சிபி சக்கரவர்த்தி இயக்குநராகியிருக்கிறார்.

இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, படத்திற்கு இசை அனிருத் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக இருக்குமாம்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 28 ஜன 2021