மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

மாரிசெல்வராஜ் படத்தில் விக்ரம் மகன்: கேரக்டர் என்ன?

மாரிசெல்வராஜ் படத்தில் விக்ரம் மகன்:  கேரக்டர் என்ன?

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர்,ஆனந்தி நடித்திருந்த இப்படம் சாதிய அடக்குமுறையை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. முதல் படத்திலேயே பெரிய பாராட்டுக்களைப் பெற்றார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெறுமாள் படம் கொடுத்த வெற்றியினால், தனுஷை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார். தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ‘கர்ணன்’ படத்தினை இயக்கிவருகிறார் மாரி செல்வராஜ். படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த வருட மே மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மாரி செல்வராஜின் மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் துருவ். தற்பொழுது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து, மாரி செல்வராஜ் படமானது துருவ்வுக்கு மூன்றாவது படம்.

இந்தப் படத்தில் கபடி விளையாட்டு வீரராக துருவ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு மாலை நேரத்தில் இயக்குநரும் துருவ்வும் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார்கள். நீண்ட விவாதமாக அது இருந்ததாகச் சொல்கிறார்கள். படத்தின் முழு கதையையும் மாரி செல்வராஜ் கூறியதாகத் தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமாவாக படம் உருவாகிறதாம்.

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக உடற்பயிற்சி செய்து உடலை மாற்றிவருகிறார். முதலில் சியான் 60 படத்தில் நடித்துவிட்டு, அப்படியே மாரி செல்வராஜ் படத்தில் இணைய இருக்கிறாராம்.

-ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 28 ஜன 2021