மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

கூகுள் குட்டப்பன் ; எந்திரனுக்குப் பிறகு இன்னொரு ரோபோ மூவி!

கூகுள் குட்டப்பன் ; எந்திரனுக்குப் பிறகு இன்னொரு ரோபோ மூவி!

மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2019ல் சுராஜ் மற்றும் செளபின் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ . இப்படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கிராமத்து சூழலில் வாழும் தந்தையான சுராஜூக்கு வீட்டு உதவிக்காக, ரோபோ ஒன்றை அனுப்பிவைக்கிறார் ஜப்பானில் பணியாற்றும் மகன் செளபின். விஞ்ஞானத்துக்கும் பாசத்துக்கும் நடுவிலான மெல்லிய கதையாக அட்டகாசமாக உருவாகியிருக்கும் திரைக்கதை.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், படத்தினைத் தயாரித்து நடிக்கவும் இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்துக்கு தமிழில் கூகுள் குட்டப்பன் என பெயரிட்டுள்ளனர். சுராஜ் கேரக்டரில் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். செளபின் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிக்கிறார். நாயகியாக லாஸ்லியா மற்றும் காமெடி டிராக்கில் யோகிபாபு நடிக்கிறார்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதில், கே.எஸ்.ரவிக்குமாரின் சகோதரரின் மகன் தான் சபரி.

மலையாளத்தில் பிஜிபால் இசையமைத்திருப்பார். தமிழில் ஜிப்ரான் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. கே.எஸ்.ரவிக்குமார் கமல் நடித்த தெனாலி படத்தை கடைசியாக தயாரித்தார். 21 வருடங்கள் கழித்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மலையாளப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் என்றாலே திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதியை தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம், மகேஷிண்டே பிரதிகாரம் தமிழ் ரீமேக்கான நிமிர் வரிசையில் அடுத்ததாக, கூகுள் குட்டப்பன் படமும் தென்காசி , குற்றாலம் சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடக்க இருக்கிறது. பிப்ரவரி 15 முதல் படப்பிடிப்பு துவங்குகிறதாம். அதன்பிறகு ஏப்ரலில் 10 நாட்கள் வெளிநாட்டில் நடக்கும் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள் படக்குழுவினர்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25’ படமும் கேரள மாநில அரசின் மூன்று விருதுகளைப் பெற்றப் படம். குறிப்பாக, சிறந்த நடிகருக்கான விருதினை சுராஜ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரோபோவை மையமாகக் கொண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் எந்திரன், 2.0 படங்கள் வெளியாகியிருக்கிறது. அவையெல்லாம் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள். இந்த வரிசையில் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் ரோபோட்டிக் திரைப்படமாக இருக்கும் கூகுள் குட்டப்பன்.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் டிரெய்லர் : https://www.youtube.com/watch?v=ZO5MN0Ws0Hc

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 28 ஜன 2021