மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

கூடுதல் காட்சிகளுடன் ஓடிடி-யில் இன்று வெளியாகும் மாஸ்டர் !

கூடுதல் காட்சிகளுடன் ஓடிடி-யில் இன்று வெளியாகும் மாஸ்டர் !

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில், அனிருத் இசையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரைக்கு வந்தது.

அரசின் 50% திரையரங்க இருக்கை அனுமதியுடன் வெளியாகியும் படம் பெரியளவில் வசூல் சாதனை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது மாஸ்டர். சென்சாரில் நீக்கப் பட்ட காட்சிகளும் ஓடிடி ரிலீஸில் இடம் பெறுகிறது. எப்படியும் 3.10 மணிநேரம் படம் இருக்கும் என்கிறார்கள்.

கடந்த வருட ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய மாஸ்டர், கொரோனாவினால் தள்ளிப்போய் 8 மாதங்கள் தாமதமாக வெளியானது. ஆனால், திரையரங்கில் வெளியாகி 17வது நாளில் ஓடிடிக்கு வந்துவிட்டது. மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படம் வெளியாகி 50 நாட்கள் கழித்து ஓடிடி ரிலீஸ் என்றே முதலில் பேசப்பட்டது. அதன்பிறகு, சொன்ன தேதிக்கு முன்பாக 30 நாட்களுக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

திடீரென, ஜனவரி 29ஆம் தேதி மாஸ்டர் ஓடிடியில் வெளியாவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படம், அதுவும் விஜய் படம் திரையரங்கில் வெளியாகி 17 நாட்களுக்குள் ஓடிடிக்கு வருவது இதுவே முதல்முறை.. எப்படி இது நடந்தது ? மாஸ்டர் படத்துக்கு ஏற்கெனவே பேசிய தொகையை விட கூடுதல் தொகைக்கு உடனடியாக ஓடிடியில் வெளியிட கேட்டிருக்கிறது பிரைம் நிறுவனம். பிரைம் சொன்ன தொகையானது மாஸ்டர் அடுத்த இரண்டு வாரங்களில் திரையரங்கில் பெறும் வசூலை காட்டிலும் அதிகமாம். அதனால், உடனடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் லலித்குமார் சம்மதம் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

அதோடு, பிரைம் நிறுவனமானது சொன்ன நேரத்துக்கு முன்பாகவே படத்தையும் ரிலீஸ் செய்துவிடும். ஆக, நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர், எப்படியும் இன்றிரவு 10 மணிக்கு மேல் ஓடிடியில் வெளியாகிவிடும்.

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வியாழன் 28 ஜன 2021