மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 ஜன 2021

மாஸ்டரில் மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்த நடிகை இவரா?

மாஸ்டரில் மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்த நடிகை இவரா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மாளவிகா மோகனன். சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

'பேட்ட' கொடுத்த அறிமுகத்தினால் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்க மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமானார். மாஸ்டரில் சாருலதா எனும் கேரக்டரில் கல்லூரிப் பேராசிரியையாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். இவருக்கு தமிழில் டப்பிங் செய்திருப்பவர் நடிகை ரவீனா ரவி.

தமிழின் முன்னணி நடிகைகளுக்கு பின்னணியில் குரல்கொடுக்கும் டப்பிங் கலைஞர் ரவீனா . விதார்த் நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நாயகியாக நடித்திருப்பார். சொல்லப்போனால், இந்த பொங்கலுக்கு வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நித்தி அகர்வாலுக்கும் இவர் தான் குரல் கொடுத்திருக்கிறார்.

ரவீனா மலையாளி என்றாலும், மாஸ்டர் படத்தின் மலையாள வெர்ஷனுக்கு இவர் குரல் கொடுக்கவில்லை. மாஸ்டர் மலையாள டப்பிங்கில் யார் மாளவிகாவிற்கு குரல் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் தற்பொழுது கிடைத்திருக்கிறது. இவரும் ஒரு நடிகை என்பது ஆச்சரியத்தகவல்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்த சுஜிதா தான், மாஸ்டரின் மலையாள வெர்ஷனில் மாளவிகாவிற்கு குரல் கொடுத்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸூம் ஒரு ஹிட் சீரியல் இதில் நடித்திருக்கும் தனம் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 27 ஜன 2021