மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

பாகுபலிக்குப் பிறகு ராஜமெளலியின் RRR ரிலீஸ் தேதி!

பாகுபலிக்குப் பிறகு ராஜமெளலியின் RRR ரிலீஸ் தேதி!

இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் அடுத்து உருவாகிவரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

பாகுபலி, பாகுபலி 2 என இரட்டைப் பிரம்மாண்டங்களைக் கொடுத்த இயக்குநர் ராஜமெளலி. பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் புனைவு வரலாற்றுக் கதையாக வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது பாகுபலி திரைப்படங்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ராஜமெளலி RRR படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். இப்படமும் வரலாற்றுப் பின்னணியில் நடக்கும் கதையாகவே உருவாகிவருகிறது. ‘இரத்தம் ரணம் ரெளத்ரம்’ என்பதின் சுருக்கமே ஆர்.ஆர்.ஆர். 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது. ஆக, நான்கு வருடம் கழித்து இந்தப் படத்தை தருகிறார் ராஜமெளலி.

இந்தப் படமும் இந்திய சினிமாவாக உருவாகிவருகிறது. அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பாகுபலியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக உருவாகிவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது உறுதியாகியுள்ளது. இப்படமானது அக்டோபர் 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பாகுபலி கொடுத்த பிரம்மாண்டத்தால், இப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படம் தயாராகிவருகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

செவ்வாய் 26 ஜன 2021