மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

டாக்டர், அயலான் ஓவர்.. சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட் ?

டாக்டர், அயலான் ஓவர்.. சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட் ?

பாண்டிராஜ் இயக்கத்தில் 2012ல் வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து தொடர் வெற்றியினால் முன்னணி நடிகராக மாறிவிட்டார். கடந்த 2019ல் மட்டும் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ படங்கள் இவருக்கு வெளியானது. 2020ல் கொரோனாவினால் எந்தப் படமும் வெளியாகவில்லை.

இந்த வருடம் இவருக்கு இரண்டு படங்கள் வெளியாக ரெடியாகிவருகிறது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன் நடிப்பில் அனிருத் இசையில் ‘டாக்டர்‘ படம் தயாராகிவருகிறது. ஏப்ரலில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அறிவியல் புனைவுத் திரைப்படம் ‘அயலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. கிராஃபிக்ஸ் பணிகள் அதிகம் இருக்கும் காரணத்தால் டிசம்பரில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

இவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக, இயக்குநர் அட்லியின் உதவியாளரான சிபிசக்கரவர்த்தி எனும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் இவரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு கதை பிடித்துப் போனதால், இந்தப் படத்தை தான் தற்பொழுது துவங்குகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சிவகார்த்திகேயன் தானே தயாரித்துக் கொடுக்கிறார் என்று சொல்லப்படுகிறது. படத்துக்கான நடிக நடிகையர்கள் மற்றும் கலைஞர்களின் தேர்வு போய்க் கொண்டிருக்கிறதாம். எப்படியும், பிப்ரவரியில் படப்பிடிப்பை துவங்கிவிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் உருவாகலாம் என்றும் ஒரு தகவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

செவ்வாய் 26 ஜன 2021