மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

மாஸ்டர்:ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது?

மாஸ்டர்:ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கல்லூரிப் பேராசிரியரான ஜே.டி. பணிமாற்றலாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாஸ்டராகச் செல்கிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களை ஒழித்து வில்லன் பவானியை சுளுக்கெடுப்பார் ஜே.டி. இதுவே படத்தின் ஒன்லைன். யு/ஏ சான்றிதழுடன் அனிருத் இசையில் படம் வெளியானது.

திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுவருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழியிலும் நேரடியாக டப் செய்து படம் வெளியானது. கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் மாஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும், உலகளவில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாகி 50 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஓடிடிக்கு வந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

மாஸ்டர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின் படி, பிப்ரவரி காதலர் தினத்திற்கே இணையத்தில் மாஸ்டர் வெளியாகும் என்கிறார்கள். அதோடு, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் நிறுவனம் பெற்றிருக்கிறது. ஆக, டிவியில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 26 ஜன 2021