மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி!

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார். சென்ற வருட பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்து உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’ அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களைக் கொடுத்த வெற்றிகரமான இயக்குநர் சிவா. இவர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையில் ‘அண்ணாத்த’ உருவாகிவருகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த வருட டிசம்பர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது. கொரோனாவுக்கு முன்பே படத்துக்கான 60% படப்பிடிப்பை முடித்துவைத்திருந்தது படக்குழு. இந்நிலையில், டிசம்பரில் துவங்கி ஜனவரிக்குள் படத்தை முடிக்கலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாலும், ரஜினிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு நின்றுபோனது.

மீண்டும் அண்ணாத்த ஷூட்டிங் எப்போது துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ். அதன்படி, நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷாக படம் வெளியாகிறது. சென்ற வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. கொரோனாவினால் எல்லாம் மாறிப்போய், இந்த வருட தீபாவளிக்கு வருகிறது.

சரி, எப்போது ஷூட்டிங் என விசாரித்தால், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு துவங்கும் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், ஜூன் மாதத்தில் ரஜினி கலந்துகொள்ள அண்ணாத்த ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினியுடன் கீர்த்திசுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துவருகிறார்கள். இதே தீபாவளிக்கு தான் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் ‘விஜய் 65’ படமும் திட்டமிட்டிருந்தார்கள். இந்தப் படமும் சன்பிக்சர்ஸ் என்பதால், நிச்சயம் விஜய் படம் இந்த வருடம் இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

Attachments area

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 25 ஜன 2021