மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

அயலான் ஷூட்டிங் நிறைவு... ரிலீஸ் எப்போது?

அயலான் ஷூட்டிங் நிறைவு... ரிலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான். இந்தப் படத்திற்கு 10 நாட்கள் ஷூட்டிங் மீதம் இருப்பதாக மின்னம்பலம் தளத்தில் ஏற்கெனவே கூறியிருந்தோம். சொன்னபடி, ஒரு பாடல் , சில க்ளைமேக்ஸ் காட்சிகளுடன் கூடிய அந்த பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு நேற்று இரவுடன் முடிந்திருக்கிறது. அதைப் படக்குழு அறிவித்துள்ளது.

அயலான் படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ், “ இந்தப் படம் எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் பிரம்மாண்டத்தையும், அசத்தல் கிராஃபிக்ஸ் காட்சிகளையும் ரசிகர்கள் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கு முன்னர் நீங்கள் பார்த்த எந்த சினிமா போல் அல்லாமல் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். யோகிபாபு மற்றும் கருணாகரன் காமெடி ரோல்களில் வருகிறார்கள். மற்றுமொரு முக்கிய ரோலில் இஷா கோபிக்கர் நடிக்கிறார். இவர் தான் படத்தில் வில்லன் ரோலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

சொல்லப்போனால், அயலான் படமானது ஜனவரி 2018ஆம் ஆண்டு ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க முதலில் துவங்கியது. படம் துவங்கிய சில மாதங்களிலேயே முந்தையப் படங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்தப் படத்துக்குப் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. படப்பிடிப்பும் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, அயலான் படத்தின் தயாரிப்பு பணிகள் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்குக் கைமாறியது. கடந்த பிப்ரவரி 2020-ல் அயலான் பட டைட்டிலை அறிவித்தது படக்குழு. கொரோனாவுக்குப் பிறகு கடந்த நவம்பரில் துவங்கிய படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்துள்ளது.

பொதுவாக, படப்பிடிப்பு முடிந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படம் ரிலீஸூக்கு ரெடியாகிவிடும். ஆனால், அறிவியல் புனைவுத் திரைப்படமென்பதால், நிறைய சிஜி பணிகள் இருக்கிறதாம். எப்படியும், 10 மாதங்கள் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு எடுக்கும் என்கிறார்கள். ஆக, சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இந்த வருட டிசம்பர் மாதம் ரிலீஸ் எதிர்பார்க்கலாம்.

இந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு முதல் ரிலீஸாக நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம் ரெடியாகிவருகிறது. மே மாதம் ரிலீஸூக்கு திட்டமிட்டுவருகிறது டாக்டர் டீம்.

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

திங்கள் 25 ஜன 2021