மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

ஹரி படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாகும் கமல் பட நடிகை

ஹரி படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாகும் கமல் பட நடிகை

சிங்கம் , சிங்கம் 02, சிங்கம் 03, சாமி, சாமி 02 என ஆக்‌ஷன் கமர்ஷியல் போலீஸ் கதைகளைக் கொடுத்தவர் இயக்குநர் ஹரி. பரபர என இருக்கும் இவரின் கதையில் எந்த ஹீரோ நடித்தாலும் ஆக்‌ஷன் அதகளம் தான்.

சூர்யாவுக்கு ஆறு, வேல், சிங்கம் சீரிஸ்களைக் கொடுத்தவர் ஹரி. சூர்யாவுக்கு கமர்ஷியில் மாஸ் ஹீரோயிஸ படங்களைக் கொடுத்தது இவர் தான். மீண்டும் சூர்யாவுடன் ‘அருவா’ படத்தில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், ஹரி சொன்னக் கதை, சூர்யாவுக்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் அந்தக் கூட்டணி முறிந்தது.

சூர்யாவுக்கு தயார் செய்த கதையை மைத்துனர் அருண்விஜய்யை வைத்து துவங்க முடிவெடுத்தார் ஹரி. அதன்படி, படமும் விரைவில் துவங்க இருக்கிறது. ஹரி - அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான நடிக நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை உறுதிசெய்துவிட்டது படக்குழு.

அருண்விஜய்க்கு ஜோடியாக படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க இருக்கிறார். அதற்கான அட்வான்ஸ் தொகை கூட வழங்கப்பட்டு விட்டதாக ஒரு தகவல். பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்க இருப்பதால், அன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்காம் படக்குழு.

ஆக்‌ஷன் எமோஷனல் டிராமாவாக உருவாக இருக்கும் இப்படத்துக்கான படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஷ்வரம், தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடக்க இருக்காம். ஹரியின் படத்தைப் போலவே, படப்பிடிப்பும் வேகமாக நடந்துமுடிந்துவிடும் என்கிறார்கள்.

ஏற்கெனவே, அருண்விஜய்யுடன் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தார் ப்ரியா பவானி ஷங்கர். இவரின் நடிப்பில் குறுதிஆட்டம், ஓ மணப்பெண்ணே, களத்தில் சந்திப்போம் படங்கள் ரிலீஸூக்குத் தயாராகிவருகிறது. தற்பொழுது கமலின் ‘இந்தியன் 2’, சிம்புவுடன் ‘பத்து தல’, ராகவா லாரன்ஸூடன் ‘ருத்ரன்’ படங்களில் நடித்துவருகிறார் என்பது கூடுதல் தகவல். இதில், முதலில் ருத்ரன் படப்பிடிப்பில் இருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர். இதை முடித்த கையோடு ஹரி படத்தில் நடிக்கிறார். அதன்பிறகே ‘பத்து தல’ ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஆக மொத்தத்தில், இந்த வருடத்தின் செம பிஸியான நடிகை இவர் தான்.

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

திங்கள் 25 ஜன 2021