மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

சூரரைப் போற்று தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம்!

சூரரைப் போற்று தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம்!

சூரரைப் போற்று படத்தை முடித்த சூர்யா அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்ததற்கு காரணமும் இருக்கிறது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படங்களில் நடிக்க இருக்கிறார் என அறிவிப்புகள் வெளியானது. ஆனால், ஹரி சொன்ன கதை பிடிக்காமல் போனதால் ஹரி - சூர்யா கூட்டணி முறிந்தது. வாடிவாசல் துவங்க நினைக்கும் போது கொரோனா வந்ததால் நடக்கவில்லை. எப்படியும் 1000 பேருக்கு மேலாவது படப்பிடிப்பில் இருக்க வேண்டுமென்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக, சமீபத்தில் மின்னம்பலம் தளத்துக்கு பிரத்யோகமாக பதிலளித்தார் வாடிவாசல் பட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு. அதன்படி, வாடிவாசல் ஜூன் மாதத்துக்கு மேல் துவங்க இருக்கிறது.

ஆகையால், பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 படத்தை துவங்கினார்கள். இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பாக, இசையமைப்பாளர் டி.இமான் படத்துக்கு இசையமைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்துக்கு தற்பொழுது இமான் இசையமைத்துவருகிறார். இந்நிலையில், சூர்யா படமும் ஒப்பந்தமாகியிருக்கிறார். சுவாரஸ்யமான இன்னொரு தகவல் என்னவென்றால், பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். அப்படி இருக்கையில், அந்தப் படத்துக்கும் இமான் தான் எப்படியும் இசையமைப்பாளராக வர வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், சிவாவின் ஃபேவரைட் இசையமைப்பாளர் டி.இமான் தான்.

கடந்த வருடம் அக்டோபர் 25ஆம் தேதியே பாண்டிராஜ் - சூர்யா கூட்டணி அறிவிக்கப்பட்டு இன்னும் படம் துவங்காததற்கு காரணம் இருக்கிறதாம். கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் எலிவேட்டை எனும் படத்தை தயாரித்துவருகிறார் சூர்யா. அதோடு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவும் இருந்தார். சில நாட்கள் கால்ஷீட்டில் இந்தப் படத்தில் நடித்து முடிப்பதாகப் பேசியிருந்தார்கள். ஆனால், அந்தப் படத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக நடிக்க வேண்டியதாகியிருக்கிறது. அதனால், பாண்டிராஜ் படம் தள்ளிப் போயிருக்கிறது. எப்படியும், இந்த மாதம் படத்தை துவங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

ஞாயிறு 24 ஜன 2021