மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

வாய்ப்பும் கடின உழைப்பும்.... : நடராஜன்

வாய்ப்பும் கடின உழைப்பும்.... : நடராஜன்

சேலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி உள்ளதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் 2020ல் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அடுத்து இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் இடம் பிடித்தார். இந்தியா டி20 தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. என்னை திடீரென ஒரு நாள் போட்டியில் களமிறக்குவதாகச் சொன்னார்கள். அதை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே எனக்கு மிகப் பெரிய அழுத்தமாக இருந்தது.

எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும் எனத் தோன்றியது. வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். எனவே என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்தேன் மற்றபடி விக்கெட்டுகளை வீழ்த்தியது எல்லாம் ஏதோ கனவு போல உள்ளது என்று தெரிவித்த அவர், சேலத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எனது கனவும் நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உடைமாற்று அறையில் சக வீரர்கள் நடந்து கொண்டது குறித்துப் பேசிய அவர், “அவர்கள் யாரும் என்னைப் புதிதாக வந்த ஒருவர் போல் நடத்தவில்லை. அவர்கள் அவ்வளவு உற்சாகப்படுத்தினார்கள். என்னோடு நெருக்கமாகப் பழகினார்கள். அவர்கள் அளித்த ஊக்கமே சிறப்பாகச் செயல்படக் காரணம்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் எனக்கு கேப்டனாக இருந்தார். உனக்கு மகள் பிறந்தது தான் உன் அதிர்ஷ்டத்துக்குக் காரணம் எனக் கூறினார். அவர் எப்போதும் சாதாரணமாகத்தான் இருக்கிறார். விராட் கோலி போன்ற மிகப் பெரிய வீரர் என்னிடம் கோப்பையைக் கொடுத்தது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிமிடம் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. கடின உழைப்பே இதுபோன்ற வெற்றிக்குக் காரணம்” எனவும் தெரிவித்தார் நடராஜன்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் போது மகள் பிறந்தது குறித்துப் பேசிய அவர், “கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் என்பது என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றும் கூறினார்.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 24 ஜன 2021