மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் டாக்டர். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சனின் இரண்டாவது படம்தான் டாக்டர். சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். யோகி பாபு, வினய் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் செல்லம்மா பாடல் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

சமீபத்தில் டாக்டர் படத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு அறிவித்திருந்தது. தற்போது, ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த தினம். இந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, டாக்டர் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது.

படப்பிடிப்பே இப்போதுதான் முடிந்திருக்கும் நிலையில் எப்படி டீஸர் சாத்தியம் என கேள்வி எழலாம். இயக்குநர் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க தயாராகி வருகிறார். எப்படியும் மார்ச் மாதம் விஜய் 65 படத்தைத் தொடங்கியாக வேண்டும். அதனால், டாக்டர் படத்தை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம் நெல்சன். அதனால், பிப்ரவரி மாதத்துக்குள் டப்பிங், இசைகோர்ப்பு, கலரிங் என அனைத்தையும் சேர்த்து முழு படத்தையும் முடித்துக் கொடுக்க இருக்கிறாராம். அதனால், படத்தை முடித்துவிட்டு, சூட்டோடு டீஸரையும் தயார் செய்ய இருக்கிறார்கள். அந்த காரணத்தால்தான் , சிவகார்த்திகேயன் பிறந்த தினத்தில் டாக்டர் பட டீஸரை வெளியிட திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.

டாக்டர் படத்துக்குப் பிறகு அயலான் படத்துக்கு பத்து நாட்களே படப்பிடிப்பு பாக்கியிருந்தாலும், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் எக்கச்சக்கமாக இருக்கிறதாம். எப்படியும் இந்தப் படம் வெளியாக குறைந்தது 10 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள். ஆக, இந்த வருட டிசம்பரில் தான் அயலான் எதிர்பார்க்கலாம். அயலான் படப்பிடிப்பு முடித்த கையோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 24 ஜன 2021