மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

விஷ்ணுவிஷால் மீது போலீஸில் புகார்... ட்விட்டரில் நடிகரின் விளக்கம்!

விஷ்ணுவிஷால் மீது போலீஸில் புகார்... ட்விட்டரில் நடிகரின் விளக்கம்!

நடிகர் விஷ்ணுவிஷால் மீது அவர் வசிக்கும் பகுதியின் குடியிருப்புவாசிகள் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணுவிஷால். தொடர்ச்சியாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக 2018இல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியானது. இவர் நடித்த ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்கள் பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ராணாவுடன் நடித்திருக்கும் காடன் திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் தயாரித்து நடித்துவரும் எஃப்.ஐ.ஆர் படம் முடிந்திருக்கிறது. தொடர்ந்து, ‘மோகன்தாஸ்’ எனும் படத்தைத் தயாரித்து நடிக்கவும் இருக்கிறார்.

இந்த நிலையில், விஷ்ணுவிஷால் தங்கியிருக்கும் கோட்டூர்புரத்தில் சக குடியிருப்புவாசிகள் புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

என்ன விஷயமென்றால்,அதிகாலை நேரத்தில் அதிக ஒசையுடன் இசை ஒலித்துக் கொண்டிருந்திருக்கிறது. இதனால், சக குடியிருப்புவாசிகள் அபார்ட்மென்ட் காவலர்களைச் சென்று பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியும் சத்தம் குறையவில்லை என்பதால் போலீஸாருக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் புகாரின் பெயரில் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அதிகாரியையே தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அதிகாரத்தொனியில் பேசியதாகவும், புகார் தெரிவித்த பக்கத்து வீட்டினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் சக குடியிருப்புவாசிகள் விரிவான புகார் ஒன்றை இ-மெயில் மூலம் காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நடிகர் விஷ்ணுவிஷால் குடிபோதையில் இருந்ததாகவும், அவரின் தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி என்பதால் சக குடியிருப்புவாசிகளை அதிகாரத்தோடு அவமரியாதையாகப் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, தினமும் இப்படியான சம்பவம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் ட்விட்டரில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘தினமும் குடித்துக் கொண்டிருந்தால் சிக்ஸ் பேக் வந்துவிடாது. கடுமையான உணவுக் கட்டுப்பாடும், மதுவிலிருந்து தள்ளி இருந்தால் மட்டுமே சாத்தியம். சிலருக்கு இதன் பின்னால் இருக்கும் விஷயம் புரிவதில்லை' எனக் கூறியிருக்கிறார்.

'நான் குடிப்பதே இல்லை, அப்படி இருக்கையில் எப்படி இந்த புகாரை ஏற்றுக் கொள்வது' என்பது போன்ற தொனியில் மறைமுகமாக ட்விட்டில் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஞாயிறு 24 ஜன 2021