மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

ரசிகர்கள் எதிர்பார்த்த ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வீடியோ !

ரசிகர்கள் எதிர்பார்த்த ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வீடியோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியான படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக பவானி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக கல்லூரி பேராசிரியராக மாளவிகா மோகனன் நடித்திருப்பார். விஜய்யின் தோழியாக ஆண்ட்ரியா படத்தில் வருவார். கல்லூரி மாணவர்களாக சாந்தனு, 96 நாயகி கெளரி கிஷண் நடித்திருப்பார்கள். விஜய் சேதுபதியின் அடியாளாக அர்ஜுன் தாஸ் படத்தில் நடித்திருப்பார்.

கல்லூரிப் பேராசிரியரான ஜே.டி. பணி மாற்றலாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாஸ்டராகச் செல்கிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களை ஒழித்து வில்லன் பவானியை சுளுக்கெடுப்பார் ஜே.டி. இதுவே படத்தின் ஒன்லைன். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளியானது.

விஜய் படங்களிலேயே அதிக கலெக்‌ஷன் இந்தப் படத்துக்குத்தான் வரும் என டிரேடிங் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகிறது. இந்த பத்து நாட்களில் தமிழகத்தில் மட்டும் 98 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கணக்கானது திரையரங்கில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் டிக்கெட் விலையின் அடிப்படையிலேயே... ஆனால், மாஸ்டர் முதல் இரண்டு நாட்களுக்கு 500, 1,000, 2,000 வரை என அதிக விலைக்கு திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், உலகளவில் ரிலீஸ் அடிப்படையில் 200 கோடி கிளப்பில் மாஸ்டர் இணைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், படத்திலிருந்து ஸ்நீக் பீக், பாடல்கள் ஒன்றொன்றாக வெளியாகிவருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் குட்டி ஸ்டோரி பாடல் வீடியோதான். எப்போது குட்டி ஸ்டோரி வெளியாகும் என கேட்டுக்கொண்டிருந்த நிலையில், விஜய் பாடி, ஆடியிருக்கும் குட்டி ஸ்டோரி பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

வீடியோ

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 24 ஜன 2021