மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஜன 2021

ஆச்சரியப்படுத்தும் ஈஸ்வரன் இசையமைப்பாளர்.. தமனின் மறுபக்கம்!

ஆச்சரியப்படுத்தும் ஈஸ்வரன் இசையமைப்பாளர்.. தமனின் மறுபக்கம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 14ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ஈஸ்வரன். படம் நல்ல வரவேற்பை கமர்ஷியலாக பெற்றாலும் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி. அதற்கு காரணம் இசையமைப்பாளர் தமன். தமிழில் பெரிதாக இவரை பயன்படுத்தாவிட்டாலும், இவரை கொண்டாட ஒரு க்ரூப் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நடிகர் அடுக்கடுக்காக படங்களை கையில் வைத்திருக்கலாம். ஒரு படம் முடிய, அடுத்தப் படத்தில் நடித்துக் கொடுக்கலாம். ஆனால், ஒரு இசையமைப்பாளர் அடுக்கடுக்காக கையில் படங்களை வைத்திருக்கிறார். அவர் தான் இசையமைப்பாளர் தமன். இரவுப்பகலாக படம் நடித்துக்கொண்டே போகலாம். கிரியேட்டிவாக புதுப்புது இசைகளை படைப்பது நிச்சயம் சவாலான ஒன்று. சமீபத்தில் தமன் இசையில் அல்லு அர்ஜூன் நடித்த ‘அல வைகுண்டபுரம்லோ’ படம் தமனுக்கு வேற லெவல் இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து இசையமைப்பாளர் தமன் லைன் அப்பில் இருக்கும் படங்களை யோசித்தாலே கண்னைக் கட்டுகிறது என்றே சொல்லலாம்.

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் கடுவா படம், இந்தியில் அக்‌ஷய்குமார், கேத்ரீனா நடிக்கும் சூர்யவன்ஷி, கன்னடத்தில் புனித்ராஜ்குமார் நடிக்கும் படமொன்றுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் தமன்.

தெலுங்கில் பாலையா நடிப்பில் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகும் ‘BB3’, பவன்கல்யாண் நடிப்பில் நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’, இதைத்தொடர்ந்து பவன் கல்யாணின் அடுத்தப் படம், சிரஞ்சீவி நடிக்கும் லூசிஃபரின் தெலுங்கு ரீமேக், மகேஷ்பாபுவின் ‘சர்காரு வாரிபட்டா’, நானி நடிக்கும் ‘டக் ஜெகதீஸ்’, விக்ரம்குமார் இயக்கத்தில் நாகசைத்தன்யா, மாளவிகா நாயர் நடிக்கும் ‘தேங்க்யூ’, த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 30வது படம், வருண் தேஜ் நடிக்க இருக்கும் 10வது படம் ஆகிய படங்களை கையில் வைத்திருக்கிறார் தமன்.

இந்திய அளவில் அதிகபடங்களை கையில் வைத்திருக்கும் ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே. அதோடு, தெலுங்கில் மூத்த நடிகர் பாலையாவில் துவங்கி இளம் நடிகர் வருண்தேஜ் வரை அத்தனை உச்ச நடிகர்களுக்கும் ஒரே இசையமைப்பாளர் இவராக இருப்பது ஆச்சரியத்தக்க விஷயம்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 23 ஜன 2021