மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஜன 2021

புதிய சிக்கல்... என்ன முடிவெடுப்பார் இயக்குநர் பாலா?

புதிய சிக்கல்... என்ன முடிவெடுப்பார் இயக்குநர் பாலா?

இயக்குநர் பாலாவுக்குக் கடைசியாக திரையரங்கில் ரிலீஸான படம் ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார். ஆனால், பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான படம் ‘வர்மா’. ஆனால், தயாரிப்பாளருக்குப் படம் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் இந்தப் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளராக ஒரு படத்தைத் தொடங்கினார் இயக்குநர் பாலா. ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விசித்திரன். இரண்டு ரோல்களில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் இந்தப் படமானது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக். பாலாவின் ‘பி’ ஸ்டூடியோஸ் தயாரித்துவருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து டீஸர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது படத்துக்குப் புதிய சிக்கல் வந்துள்ளது.

சிஎஸ்கே எனும் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், விசித்திரன் எனும் டைட்டிலை கடந்த 2015ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்திருக்கிறார். அதோடு, சென்ற மார்ச் மாதம் வரையிலும் டைட்டிலைப் புதுப்பித்தும் வந்திருக்கிறார். ஆக, விசித்திரன் எனும் தலைப்பைப் பயன்படுத்த தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதனால், விசித்திரன் படத் தயாரிப்பாளரான பாலா மற்றும் இணைத் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளியும் வைத்திருக்கிறது.

இந்த வழக்கினால் படத்தின் பெயரில் சிக்கல் உருவாகியிருக்கிறது. திரையரங்கில் சீக்கிரமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருந்தார் பாலா. தற்போது வழக்கு தொடர்ந்தவருக்குத் தீர்ப்பு சாதகமானால் விசித்திரன் எனும் பெயரை மாற்ற வேண்டும் அல்லது பெரும் விலைகொடுத்து இந்த டைட்டிலை பெற வேண்டிய நிலைக்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன செய்யப் போகிறார் பாலா?

ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 22 ஜன 2021