மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

அஜித் இயக்குநர் விஜய் படத்துக்குள் வந்ததெப்படி? விஜய் 66 இயக்குநர் யார்?

அஜித் இயக்குநர் விஜய் படத்துக்குள் வந்ததெப்படி? விஜய் 66 இயக்குநர் யார்?

விஜய்க்கு வசூலில் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கும் படமாகியிருக்கிறது மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் பெரிய அளவில் சாதனைப் படைத்துவருகிறது. படத்தின் நீளம் மட்டுமே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், பக்கா எண்டர்டெயின்மெண்ட் படமாக பெயர் பெற்றுவிட்டது மாஸ்டர்.

அடுத்தக் கட்டமாக விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலமாவு கோகிலா பட இயக்குநர்தான் நெல்சன். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். காமெடி ஆக்‌ஷன் கேங்க்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. சீக்கிரமே இந்தப் படம் துவங்க இருக்கிறது.

தொடர்ந்து, விஜய் 66வது படத்தை யார் இயக்குவார் என்று விசாரித்தால் மீண்டும் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுவந்தாலும், விஜய்யை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தற்பொழுது அஜித் நடிக்கும் வலிமை படத்தை இயக்கிவருகிறார் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என இவர் இயக்கிய மூன்று படங்களுமே பெரிய ஹிட். இரண்டாவது முறையாக அஜித்தை இயக்கிவருகிறார். அடுத்தக் கட்டமாக விஜய் 66 பட இயக்குநராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக அஜித் பட இயக்குநர்கள், விஜய்க்கு படம் இயக்கியதில்லை. அதுபோல விஜய் படத்தை இயக்கியவர்கள் அஜித்துக்கு படம் பண்ணுவதும் நடப்பதில்லை. இயக்குநர் எழில், எஸ்.ஜே.சூர்யா இயக்கியதோடு சரி. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில், ஹெச்.வினோத் எப்படி என்று விசாரித்தால் புதுமையான இன்னொரு தகவல் கிடைத்தது.

விஜய் படத்தை இயக்க முதலில் இயக்குநர் சிவாவிடம் தான் பேச்சுவார்த்தைப் போயிருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு படங்களை இயக்கியவர் சிவா. தற்பொழுது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, சூர்யாவுக்கு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதனால், தொடர்ந்து படங்கள் லைன் அப்பில் இருப்பதால், இயக்குநர் சிவா தான் ஹெச்.வினோத்தினைப் பரிந்துரை செய்தாராம். அப்படிதான், விஜய் படத்துக்கானப் பேச்சுவார்த்தைக்குள் வந்திருக்கிறார் ஹெச்.வினோத்.

விஜய் பட வாய்ப்பு மிகப்பெரிய விஷயம். ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் வாய்ப்பை சக இயக்குநருக்குக்காக விட்டுக் கொடுப்பதெல்லாம் இன்றைய இளம் இயக்குநர்களிடம் இருக்கும் ஆரோக்கியமான குணமாகவே பார்க்க வேண்டும்.

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வியாழன் 21 ஜன 2021