மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

சிவகார்த்திகேயன் படத்தில் ரஜினியின் தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் படத்தில் ரஜினியின் தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் தற்பொழுது தயாராகிவருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது படம் அயலான். 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் புனைவுத் திரைப்படமாக இது உருவாகிவருகிறது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறார்கள்.

இவ்விரு படங்களையும் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் உலாவருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறதென்றால் நிச்சயம் பெரிய இயக்குநர் தான் ஒப்பந்தமாகியிருக்க வேண்டும். அதனால், சிவகார்த்திகேயனை யார் இயக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸூக்காக லைகா நிறுவனமானது சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்கிறதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்தை தயாரித்தது லைகா நிறுவனம். ரஜினியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படத்தினை தயாரிக்கிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 65 படம் உருவாக இருந்தது. ஆனால், இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்காமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனத்துடன் இருந்த கருத்து வேறுபாட்டினாலும் நான்காவது முறையாக விஜய்யை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நடுவில் அனிமேஷன் திரைப்படமொன்றை இயக்கவும் தயாராகிவந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இவர் மட்டுமல்லாமல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் பெரியசாமி உள்ளிட்ட சில இயக்குநர்களின் பெயரும் சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘பன்னிகுட்டி’, த்ரிஷாவின் ‘ராங்கி’, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் மணிரத்னத்துடன் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வியாழன் 21 ஜன 2021