மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

‘விஜய் 65’ படத்தில் விஜய்க்கு நாயகி இவரா?

‘விஜய் 65’ படத்தில் விஜய்க்கு நாயகி இவரா?

கடந்த வருட டிசம்பரில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க உறுதியானார் நெல்சன் திலீப்குமார்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை முடித்துவிட்டார். தற்போது விஜய் 65 படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

படத்துக்கான ஸ்க்ரிப்ட் ஃபைனல் செய்யும் வேலைகள் தற்போது போய்க்கொண்டிருக்கிறதாம். அதோடு, படத்துக்கான கலைஞர்களை உறுதிசெய்யும் பணிகளும் நடந்துவருகிறது. அப்படி, விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் நாயகியாக சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். தெலுங்கில் உச்ச நடிகர்களின் பல வெற்றிப் படங்களில் பூஜா நாயகியாக நடித்தார்.

மகேஷ் பாபுவுடன் ‘மகரிஷி’, ஜூனியர் என்.டி.ஆருடன் ‘அரவிந்த சமேத வீர ராகவா’ மற்றும் அல்லு அர்ஜுனுடன் ‘அல வைகுண்டபுரமுலோ’ படங்கள் கவனிக்கத்தக்க படங்கள். அதுபோல, ஹ்ருத்திக் ரோஷனுடன் ‘மொகஞ்சாதரோ’ உள்ளிட்ட பல இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்ததாக, பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருக்கும் ‘ராதே’ படத்திலும் நாயகி இவர்தான். இந்தப் படம், வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது.

இப்படி, இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. அதனால், மீண்டும் தமிழுக்கு அழைத்துவர திட்டமிட்டு வருகிறார்கள். இப்படித்தான், தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமான இலியானாவை தமிழ் சினிமா அதோடு மறந்துபோனது. அவர், தெலுங்கில் பெரிய நடிகையானதும் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தனர் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.

‘விஜய் 65’இல் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய்யை நடிக்க வைக்கவும் பேச்சு நடந்துவருவதாகவும் ஒரு தகவல் உலாவுவதும் குறிப்பிடத்தக்கது.

ஆதினி

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 21 ஜன 2021