மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

புதிய முடிவுடன் கார்த்தியின் சுல்தான் டீம்... ரிலீஸ் தேதி இதுதான் !

புதிய முடிவுடன் கார்த்தியின் சுல்தான் டீம்... ரிலீஸ் தேதி இதுதான் !

நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு மூன்று படங்கள் வெளியானது. 'தேவ்', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' மற்றும் ஜோதிகாவுடன் 'தம்பி' படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், 2020க்கான கார்த்தியின் திட்டமாக இருந்தது சுல்தான். கொரோனாவினால் வெளியாகமுடியாமல் போனது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட இயக்குர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமான படம்தான் சுல்தான். கார்த்திக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். திண்டுக்கல் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்திருக்கிறது. தற்பொழுது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துவரும் ராஷ்மிகாவின், தமிழ் அறிமுகமாக சுல்தான் இருக்கப் போகிறது.

சுல்தான் படமானது திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றே ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதோடு, படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ஓடிடியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டார்கள். இப்போது, விஜய் நடித்த மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் நேரடியாக திரையரங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கொரோனா மட்டுமல்ல எது வந்தாலும் ரசிகர்கள் திரையரங்குகளை கைவிடமாட்டார்கள் என்று நம்ப துவங்கியிருக்கிறது திரையுலகம். ஆகையால், சுல்தான் படத்தை திரையரங்கில் வெளியிட முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

திரையரங்க ரிலீஸை உறுதி செய்திருப்பதால் ஏப்ரல் 14ஆம் தேதி (புதன் கிழமை) என்பது வாரத்தின் நடுவில் வருகிறது. அதனால், முன்கூட்டியே ஏப்ரல் 2-ஆம் தேதி புனித வெள்ளி பண்டிகையை குறிவைத்து சுல்தானை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம் சுல்தான் டீம்.

கைதி, மாஸ்டர் பணியாற்றிய சத்யன்சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், விவேக் மெர்வின் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். கார்த்தி, ராஷ்மிகா, யோகிபாபு நடிப்பதை மட்டுமே படக்குழு அறிவித்தது. ஆனால், பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதாம். யார் அந்த நடிகர்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ரசிகர்களை ஆச்சரியப்படுத்த அந்த ரகசியத்தை காத்துவருகிறார்களாம் சுல்தான் படக்குழுவினர்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

புதன் 20 ஜன 2021