மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

பாலிவுட்டுக்கு தைரியம் கொடுத்த மாஸ்டர்.. துணிந்து முடிவெடுத்த நடிகர் !

பாலிவுட்டுக்கு தைரியம் கொடுத்த மாஸ்டர்.. துணிந்து முடிவெடுத்த நடிகர் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலால் பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடிக்கு சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் என தீர்க்கமாக முடிவெடுத்தது மாஸ்டர்.

50% மட்டுமே திரையரங்க இருக்கைக்கு அனுமதி, கொரோனா தொற்று அச்சுறுத்தல் என குழப்பமான சூழலில் துணிச்சலாக திரையரங்கில் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் லலித்குமார். அதுவும், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழியிலும் வெளியானது. சொல்லப்போனால், விஜய்க்கு முதன்முறையாக பாலிவுட்டில் நேரடியாக வெளியாகும் படம் மாஸ்டர் தான். இந்தியில் டப் செய்து வெளியான மாஸ்டர் இதுவரை 3 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தெலுங்கு, கன்னடாவில் கிடைத்த வசூலை விட குறைவு தான் என்றாலும், இன்றைய சூழலில் பாலிவுட்டில் மிகப்பெரிய கலெக்‌ஷன் தான் என்கிறார்கள். ஏனெனில், ஆந்திரா, கன்னடாவில் முன்னரே திரையரங்குகள் திறக்கப் பட்டுவிட்டன. ஆனால், வட இந்தியாவில் கொரோனா அச்சத்தால் திரையரங்கிற்கு மக்கள் வருவதில்லை. அதோடு, இந்தியில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இன்னும் தியேட்டரில் வெளியாகவில்லை.

பாலிவுட் சினிமாவே தியேட்டரில் படத்தை வெளியிட பயந்துகொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக மாஸ்டரை வெளியிட்டு, வசூலையும் பார்த்துவிட்டார் மாஸ்டர் தயாரிப்பாளர். இதனால், கொஞ்சம் தைரியத்துடன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ராதே. இந்தப் படம் முடிந்து ரிலீஸூக்காகக் காத்திருந்தது. கொரோனாவினால் திரையரங்கில் வசூல் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என படத்தை வெளியிடாமல், நேரடியாக ஓடிடிக்கு போய்விடுவோமா என்ற யோசனையில் இருந்தார் சல்மான்கான். இப்போது ஒரு புதுமுடிவொன்றை எடுத்திருக்கிறார்.

ராதே படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு அதாவது, மே 13ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் சல்மான் கான். இந்த முடிவை ஆச்சரியத்துடன் பார்க்கிறது பாலிவுட் திரையுலகம். ஆக, இந்த வருடத்தில் பாலிவுட்டில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் படமாக சல்மான் கானின் ராதே இருக்கும். பிரபுதேவா இயக்கியிருப்பதாலும், முக்கிய ரோலில் நடிகர் பரத் நடித்திருப்பதாலும் தமிழிலும் டப் செய்து வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆதினி

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 20 ஜன 2021