மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

பிரம்மாண்ட செட்டில் மாநாடு ; ரஹ்மானுக்கு பத்து தல டீமின் சர்ப்ரைஸ்!

பிரம்மாண்ட செட்டில் மாநாடு ; ரஹ்மானுக்கு பத்து தல டீமின் சர்ப்ரைஸ்!

சிம்புவுக்கு ஈஸ்வரன் படம் வெளியாகிவிட்டது. அடுத்ததாக, ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்தக் கதைக்களத்துடன் உருவாகிவருகிறது. முதன்முறையாக பொலிட்டிகல் ஜானரில் நடிக்கிறார் சிம்பு.

சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய போது தான், கொரோனா வந்தது. உடனே படப்பிடிப்பை நிறுத்தியது படக்குழு. கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தும் மாநாடு துவங்குவதில் சிக்கல் இருந்தது. அதற்கு காரணம், எப்படியும் 1000 துணை நடிகர்கள் படத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் துவங்க முடியாமல் இருந்தது. அதன்பிறகு, படப்பிடிப்பை துவங்கி, இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு வந்துவிட்டது மாநாடு.

நேற்றிலிருந்து படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்துவருகிறது. சிம்பு உட்பட அனைத்து நடிகர்களும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்களாம். அதோடு, மாநாடு காட்சிகளுக்காக பிரம்மாண்டமான செட் ஒன்றையும் தயார் செய்திருக்கிறது படக்குழு. எப்படியும் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்கிறார்கள். படத்தை தேர்தலுக்கு முன்பாக இறக்கிவிடவும் திட்டமாம். ஆக, ஏப்ரலில் மாநாடு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மாநாடு படத்தில் முஸ்லீம் இளைஞராக அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ஜில்லுனு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் இணைகிறார் சிம்பு.

சமீபத்தில் படத்திற்கான போஸ்டர் வெளியாகி வைரலானது. சிம்புவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக். சுவாரஸ்யமான புது தகவல் என்னவென்றால், படத்தின் போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அதோடு, படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்கும் விதமாக ஒரு ட்ரிப்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பத்துதல டீம். ஜில்லுனு ஒரு காதல் வெளியாகி 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் கிருஷ்ணாவுடன் இணைகிறார் ரஹ்மான். அதனால், தான் இந்த சிறப்பு வீடியோ. அதில் ரஹ்மானைப் பற்றி மணிரத்னம், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வைரமுத்து, ரஜினி பேசியிருப்பவை இடம்பெற்றிருக்கிறது.

எப்படி, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்குள் வந்தார் ? சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஜூம் கால் மூலம் பேசினாராம் கிருஷ்ணா. அப்போது தான் படத்துக்கான முழு கதையையும் சொல்லியிருக்கிறார். படத்தில் நிறைய இசைக்கான வேலைகள் இருக்கும் என கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது. கதையைக் கேட்டதுமே சம்மதம் தெரிவித்திருக்கிறார் இசைப்புயல். பத்துதல படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்க இருக்கிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

புதன் 20 ஜன 2021