மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

என்னாச்சி வாடிவாசல் ? விளக்கம் சொன்ன தயாரிப்பாளர் தாணு!

என்னாச்சி வாடிவாசல் ? விளக்கம் சொன்ன தயாரிப்பாளர் தாணு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் ‘வாடிவாசல்’. இந்தப் படம் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. பேமிலி டிராமாவாக உருவாகும் இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வெற்றிமாறனும் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புப் பணிகளில் இருக்கிறார். முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடந்துவருகிறது.

சூர்யாவும், வெற்றிமாறனும் அடுத்தடுத்து புதுப் படங்களை கமிட் செய்துவைத்திருப்பதால், வாடிவாசல் எப்போது துவங்கும் என ரசிகர்கள் சார்பில் நம்முடைய மின்னம்பலம் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். இப்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.

வாடிவாசல் எப்போது துவங்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பதில் ஒன்றை அளித்திருக்கிறார்கள். வாடிவாசல் படமானது ஜல்லிக்கட்டு குறித்த ஒரு கதை. படத்தை துவங்க நினைக்கும் போது தான் கொரோனா பரவல் அதிகமானது. அதோடு, படம் துவங்கினால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1000 பேருக்கு மேல் கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாகிறது. அதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்பதை விளக்கியிருக்கிறார். அதோடு, எப்படியும் ஜூன் மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சொன்னார்.

தமிழ் சினிமா நடிகர்களுக்கு பெரிய வெற்றிப் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விஜய்க்கு துப்பாக்கி, ரஜினிக்கு கபாலி, தனுஷூக்கு அசுரன் படங்களை எடுத்துக் காட்டாக குறிப்பிடலாம். தற்பொழுது, பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ படத்தை தயாரித்துவருகிறார். அடுத்தக் கட்டமாக, வாடிவாசல் படத்தோடு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

புதன் 20 ஜன 2021