மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

இறங்கிவராத படக்குழு, விலைபோகாத ஈஸ்வரன் !

இறங்கிவராத படக்குழு, விலைபோகாத ஈஸ்வரன் !

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 14ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். மாஸ்டருக்கு போட்டியாக வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சிம்புவுக்கு நாயகியாக நித்தி அகர்வால் நடித்திருக்கிறார். முக்கிய ரோல்களில் இயக்குநர் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, பால சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். அதோடு, ஒளிப்பதிவாளராக திரு, படத்தொகுப்பாளராக ஆண்டனி பணியாற்றியிருக்கிறார். இப்படி, மிகப்பெரிய கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும் இன்னும் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக, ஒரு படம் ரிலீஸாகும் நேரத்திலேயே படத்திற்கான டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையெல்லாம் விற்பனையாகிவிடும். அதுவும், சிம்பு மாதிரியான பெரிய நட்சத்திரங்களின் படங்கள் போட்டா போட்டியுடன் தொலைக்காட்சி உரிமையாளர்கள் கைப்பற்றுவார்கள்.

ஈஸ்வரனுடன் வெளியான மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரைம் வீடியோவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் முந்தைய படமான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியது. வாரத்திற்கு ஒரு முறையாவது போட்டு அடித்து துவைக்கிறது. இப்படி இருக்கையில், ஏன் ஈஸ்வரன் இன்னும் விலைபோகவில்லை என்று விசாரித்தேன். ஈஸ்வரன் படத்திற்கான டிவி ரைட்ஸூக்கு 10 கோடி விலை நிர்ணயித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் டிவி உரிமைக்கு பேசியிருக்கிறது ஈஸ்வரன் தயாரிப்பு தரப்பு. ஆனால், இவர்கள் சொன்ன விலையைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்களாம். அதிகமான விலையே படத்தின் விற்பனையில் சிக்கலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படியும், தயாரிப்பு தரப்பு விலையை குறைத்தால், விற்பனையாக வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

புதன் 20 ஜன 2021