மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

செல்வா, தனுஷுடன் இணையும் நாயகி!

செல்வா, தனுஷுடன் இணையும் நாயகி!

சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே. படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை இயக்கத் தயாராகி வருகிறார். படத்துக்கான முதல்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டார் செல்வராகவன்.

காதல்கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை படங்களைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் காம்போவில் உருவாக இருக்கும் படம் “நானே வருவேன்”. இந்தப் படத்துக்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் படத்துக்கான டெஸ்ட் ஷூட் நடந்துவருகிறது. அதில் தனுஷுடன் நடிக்க இருப்பவர்களுக்கான தேர்வு போய்க்கொண்டிருக்கிறது.

தனுஷுடன் நாயகியாக நடிக்க இரண்டு நாயகிகள் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள். அதில் ஒருவராக தமன்னா இடம்பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தனுஷ், தமன்னா காம்போவில் இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது. அவை, வேங்கை மற்றும் படிக்காதவன் படங்களே. இவ்விரு படங்களுமே தமன்னா, தனுஷுக்கு கமர்ஷியலாக ஹிட் கொடுத்தப் படங்கள். இப்போது, இந்த ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. முதன்முறையாக செல்வராகவன் படத்தில் நடிக்க இருக்கிறார் தமன்னா. மற்றுமொரு நாயகிக்கான தேர்வு நடந்துவருகிறதாம்.

‘பரியேறும் பெருமாள்’ மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் இந்தி படமான அட்ராங்கி ரே படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதோடு, ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ படத்திலும் ஒவ்வொரு மாதமும் முதல் பத்து நாட்கள் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த கையோடு, செல்வராகவன் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்க இருக்கிறார் தனுஷ்.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 18 ஜன 2021