மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

வெளிநாடு பறக்கும் வலிமை டீம்! டீஸர் ரிலீஸ் எப்போது ?

வெளிநாடு பறக்கும் வலிமை டீம்! டீஸர் ரிலீஸ் எப்போது ?

அஜித் நடிப்பில் பரபரப்பாக தயாராகிவருகிறது வலிமை. நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் & போனிகபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது படமே வலிமை.

அஜித் நடிக்கும் 60-வது படமென்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவருகிறது. அதோடு, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஹெச்.வினோத் என்பதால் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்.

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கேரக்டர் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் . முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்ட் சினிமாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது படக்குழு. வட இந்திய பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், பூனே உள்ளிட்ட சில நகரங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டது. அடுத்தக் கட்டமாக, சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு படக்குழு செல்ல இருக்கிறதாம். அதற்கான ஆயத்தப் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் சில முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்க இருக்கிறாராம் ஹெச்.வினோத்.

படத்தின் மிக முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளே தற்பொழுது படமாகிக் கொண்டிருக்கிறதாம். இயக்குநருக்கு இரண்டு வித ஐடியாக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒண்ணு, இந்தியாவுக்குள்ளேயே முடித்துவிடுவது, மற்றொன்று, வெளிநாட்டில் படத்தை எடுத்து முடிப்பது. இறுதியாக, இறுதிக் கட்ட ஷூட்டுக்கு தென் ஆப்பிரிக்கா செல்வதாக முடிவெடுத்திருக்கிறது படக்குழு. விரைவில் படக்குழு பறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழர் புத்தாண்டில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும், மே 1ஆம் தேதி அஜித் பிறந்த தினத்துக்கு படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திங்கள் 18 ஜன 2021