மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

கடைசி டெஸ்ட்: வெற்றி பெறுமா இந்திய அணி?

கடைசி டெஸ்ட்: வெற்றி பெறுமா இந்திய அணி?

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான நாளை (ஜனவரி 18ஆம் தேதி)யும் மழை ஆபத்து உள்ளதால் இந்திய அணி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது நாளான நேற்று (ஜனவரி 17) இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 111.4 ஓவர்களில் 336 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து மொத்தம் 54 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 18) தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான நாளை (ஜனவரி 19ஆம் தேதி)யும் மழை குறுக்கிடும் ஆபத்து உள்ளதால் இந்திய அணி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

திங்கள் 18 ஜன 2021