மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

வாவ்... அஜித்தை இயக்கப் போனவர், சிம்புவுக்கு வந்துவிட்டார் ... புது தகவல்!

வாவ்... அஜித்தை இயக்கப் போனவர், சிம்புவுக்கு வந்துவிட்டார் ... புது தகவல்!

மாதவன் நடித்த இறுதிச்சுற்று மற்றும் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவரின் அடுத்தப் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் சூரரைப் போற்று. ஓடிடியில் வெளியானாலும் பெரிய வெற்றியைப் பெற்றதற்கு, பெரியளவில் பாராட்டப் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா. சூரரைப் போற்று படத்தை முடித்த கையோடு, அஜித் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

வலிமை படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா படத்தில் அஜித் நடிப்பார் என்ற செய்திக்கு எந்த வித எதிர்ப்போ, ஆமோதிப்போ வரவில்லை என்பதே உண்மை. ஆக, அஜித் - சுதா கொங்கரா கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அதில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சுதா கொங்கராவும் சிம்புவும் நீண்ட கால நண்பர்கள். சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா. அவர் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துப் போய்விட்டதாம். ஆக, சுதாகொங்கரா அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ஹீரோ சிம்பு என்று சொல்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படங்களில் தற்பொழுது சிம்பு நடித்துவருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு தேதிகள், எப்போது படம் முடியும் என்கிற தெளிவு கிடைத்த பிறகு, சுதா கொங்கரா படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதோடு, தயாரிப்பாளர் உறுதி செய்யும் பணிகள் தற்பொழுது போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல்.

நடிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநர் சுதா கொங்கரா. கம்பேக் கொடுத்திருக்கும் சிம்புவுக்கு நிச்சயம் உறுதியாக ஹிட் படத்தை சுதா கொடுப்பார் என்பதில் எந்த மாற்றமுமில்லை. எல்லாம் சரியாக நடந்தால் சுதா - சிம்பு கூட்டணி விரைவில் இணையும்...!

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 18 ஜன 2021