மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

போட்டியாளர்கள்18 பேருக்கும் பிக்பாஸ் கொடுத்த சுவாரஸ்ய பட்டங்கள்.. முழு லிஸ்ட்!

போட்டியாளர்கள்18 பேருக்கும் பிக்பாஸ் கொடுத்த சுவாரஸ்ய பட்டங்கள்.. முழு லிஸ்ட்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகி, ஐம்பது லட்சம் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜூனன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனானது கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி துவங்கியது. ஜூன் மாதமே வெளியாகியிருக்க வேண்டியது, கொரோனாவினால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத், ஆஜித் ,ஷிவானி, கேப்ரியல்லா, ரியோ, ஆரி, பாலாஜி, சோம், ரம்யா பாண்டியன் ஆகியோர் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில், ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோம் ஷேகர் ஆகியோரிடம் கடும் போட்டி இருந்தது. யார் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோம், ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ஆகியோர் நேற்றைய நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐம்பது லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு சீசனிலும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பட்டம் ஒன்று கொடுக்கப்படும். அப்படி, இந்த சீசனில் போட்டியிட்ட 18 பேருக்கும் பட்டத்துடன் கூடிய பிக்பாஸ் விருது வழங்கப்பட்டது. அப்படி, ஒவ்வொருவரும் பெற்ற சுவாரஸ்யப் பட்டங்கள் இதோ..,

ஆரி - Motivator

பாலாஜி - கேம் சேஞ்சர்

ரியோ - எண்டர்டையினர்

ரம்யா - சிங்கப் பெண்ணே

சோம் சேகர் - மிஸ்டர் க்ளீன்

ஷிவானி - Dancing Doll

ஆஜித் - Lovable

சனம் - Most Determined

அனிதா - Bold and Beautiful

சுரேஷ் சக்ரவர்த்தி - ட்ரெண்டிங் ஸ்டார்

கேபி - Sportive

அர்ச்சனா - பெஸ்ட் குக்

சுசித்ரா - fearless

ஜித்தன் ரமேஷ் - Mr.Dont Care

வேல்முருகன் - bigg boss Dude

நிஷா - Stress Buster

ரேகா - Brave heart

சக்யுக்தா - Best Looking

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

திங்கள் 18 ஜன 2021