மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

பிக் பாஸ் 4 வெற்றியாளர்... GRAND FINALE-யின் ஹைலைட்ஸ்!

பிக் பாஸ் 4 வெற்றியாளர்... GRAND FINALE-யின் ஹைலைட்ஸ்!

தமிழகத்தின் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இதன், கிராண்ட் ஃபினாலே சிறப்பாக நேற்று நடந்துமுடிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியது. மொத்தமாக 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத், ஆஜித், ஷிவானி மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றப்பட்டனர்.

இறுதியாக, பிக் பாஸ் சீசன் 4இன் இறுதிக்கட்டப் போட்டியாளராக ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோம் ஷேகர் ஆகியோர் 106ஆவது நாளாக பிக் பாஸ் வீட்டில் டைட்டிலை வெல்ல போட்டியிட்டு வந்தனர். நேற்றைய இறுதி நிகழ்ச்சியில், இந்த நான்கு போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசன் அளித்த பரிசு ஹைலைட். பாலாஜிக்கு விருப்பமான உடற்பயிற்சி செய்யும் தம்பிள் பரிசளித்தார். செடி வளர்ப்பு பிரியரான ரம்யாவுக்கு ஆர்கானிக் விதைகளும், இசைப்பிரியரான சோம் ஷேகருக்கு க்ளாப் பாக்ஸூம் நடிகர் ஆரிக்கு பேனாவும், மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரும் பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.

இந்த நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதல் ஆளாக வெளியேறியது சோம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சோமை வெளியே அழைத்து வந்தார். அதன்பிறகு, ரம்யா பாண்டியனை அழைத்துச் செல்ல கவின் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். அதன்பிறகு, மூன்றாவது வெளியேறியவர் ரியோ ராஜ். ரியோவை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல நடிகை ஷெரின் வந்தார்.

மூன்றாவது சீசனில் இறுதிப் போட்டியில் 20 கோடி வாக்குகள் வந்திருந்தது. இந்த முறை, நான்காவது சீசனுக்கு 31 கோடிக்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்தார் கமல். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு புத்தகத்தை அறிமுகம் செய்வார். அப்படி, இந்த இறுதி நிகழ்ச்சியில் புத்தகம் வாசிப்பது எப்படி எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.

இறுதியாக, ஆரி மற்றும் பாலாஜி இருவரில் யார் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் தொகுப்பாளர் கமல்ஹாசன். இருவரையும் மேடைக்கு அழைத்துச் சென்றவர், வெற்றியாளரை அறிவித்தார். அதன்படி, பிக் பாஸின் 4ஆவது சீசனின் டைட்டிலை ஆரி வென்றார். போட்டியின் இரண்டாவது இடத்தை பாலாஜி பிடித்தார்.

16 கோடி 50 லட்சத்துக்கு மேல் ஓட்டுகள் விழுந்திருக்கிறது. ரன்னர் அப்புக்கு 6 கோடியே 14 லட்சத்துக்கு மேல் ஓட்டுகள் பதிவாகியிருக்கிறது.

போட்டியில் 10 முறை நாமினேஷனுக்குச் சென்று, ரசிகர்களின் ஓட்டின் மூலம் காப்பாற்றப்பட்டார் ஆரி. வீட்டுக்குள் ஆரிக்கு எதிராக அனைவரும் இருந்தாலும், மக்களின் அன்பும், ஆதரவுமே பிக் பாஸ் சீசனை வெல்லக் காரணம் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள். அதோடு, ஆரிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் தரப்பட்டது. அந்தப் பரிசுத் தொகையை ஆரியின் மகள் கையால் ஆரிக்குக் கொடுத்தார் கமல்ஹாசன்.

பிக் பாஸின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் வரிசையில் நான்காவது சீசனில் வெற்றியாளராகியிருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திங்கள் 18 ஜன 2021