மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

இறந்த பிறகும் எத்தனை ரோல்: அப்டேட் குமாரு

இறந்த பிறகும் எத்தனை ரோல்:  அப்டேட் குமாரு

அய்யா எம்ஜிஆர் அய்யா... நீங்க உயிரோட இருந்தப்ப திமுக அதிமுகனு ரெண்டு கட்சிகளுக்கு தான் உழைச்சீங்க. ஆனா... நீங்க காலமான பிறகு எத்தனையோ கட்சிகளுக்கு பயன்படுறீங்களே... உங்க மடியில தவழ்ந்த வங்க, உக்காந்து இருந்தவங்க எல்லாம் இன்னிக்கு கட்சி ஆரம்பிச்சு உங்களையே பயன்படுத்திக்கிட்டிருக்காங்க. சினிமால கூட நீங்க இத்தனை ரோல் பண்ணதில்லையே அய்யா... இதையெல்லாம் பார்த்துக்கிட்டு மேல எப்படி பொறுமையா இருக்கீங்க?

நாங்க அப்டேட்டை பார்க்குறோம்...

ச ப் பா ணி

ஏரிகள் எல்லாம் சாலைகள் போல சமதளமாய்...

சாலைகள் எல்லாம் ஏரிகள்போல

பள்ளங்களாய்!

-மேரி மேகலா

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒™

"ஸ்வீட் மெமரிஸ்" என்பதெல்லாம் சர்க்கரை வியாதி வருவதற்கு முன்பு இனிப்பு சாப்பிட்ட நினைவுகளே.

பர்வீன் யூனுஸ்

ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் தான் என்பதை கண்டுபிடித்தவர்கள், மொபைல் சர்வீஸ் ப்ரொவய்டர்களே.

ரஹீம் கஸ்ஸாலி

பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வெளியூர் பயணம் போனால் கட்டிச்சோறு கட்டிக்கொண்டு போவது நல்லது. எல்லா ஹோட்டல்களையும் மூடி சோத்துக்கு சுத்த வச்சுடுவாங்க.

நாகராஜ சோழன் MA.MLA

கங்கை நீர் எது, சாக்கடை நீர் எது என்று தமிழக மக்கள்தான் முடிவு செய்வார்கள்!- டிடிவி தினகரன்.

டோக்கன் டெக்னிக் இனியும் மக்கள் கிட்ட செல்லுபடி ஆகுமா பாஸ்?

கடைநிலை ஊழியன்

மழை காலங்களில் கதவுகளுக்கும் காய்ச்சல் வந்துவிடுகிறது. திறக்கவும், மூடவும் சிரமப்படுகிறது !!

balebalu

"நகத்தால கிள்ள கூடியதை கோடரியால் வெட்டினானாம்" என்ற பழமொழியின் அப்டேட்டட் வெர்ஷன் தான் பட்டா கத்தியால் கேக் வெட்டுவது !

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒

பொங்கல் விடுமுறையான மூன்று நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனை.

--செய்தி

ரேஷன்ல 2500ரூபாய் கொடுத்தப்ப நான் சொன்னேன்ல அவங்க வருவாங்கன்னு..

PrabuG

பொங்கலுக்கு மாடு பிடிப்பதை விட மிகப்பெரிய சாதனை பொங்கல் முடிந்ததும் ஊரைவிட்டு போக பேருந்தில் ஜன்னல் சீட் பிடிப்பதுதான்..

ச ப் பா ணி

அவன் ஒரு சொந்த வீடு பற்றிய கனாவில் இருந்தபோது..

வாடகை பாக்கி என்னாச்சினு கேட்டு வந்தார் ஹவுஸ் ஓனர்

தர்மஅடி தர்மலிங்கம்

நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்!

பிரதமர் தான், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அரசியல் தலைவர்கள் யாரும் முந்த வேண்டாம்னு சொன்னாரே.

கோழியின் கிறுக்கல்!!

நாம எல்லாம் WhatsApp Status வச்சி பார்த்திருக்கோம்,

ஆனா WhatsAppஏ Status வைக்க வச்சிட்டாங்க!

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 17 ஜன 2021