மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி... அட, ஹீரோ இவரா?

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி... அட, ஹீரோ இவரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்த பொங்கல் தினச் சிறப்பாக ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

விஜய்க்கு இணையான ரோலில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். நடிகையாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். அதோடு, ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

திரையரங்கில் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்படியும், ஐந்து நாளுக்கான கலெக்‌ஷன் படி பார்த்தால் 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள். அதோடு, பிற மாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை இந்தியில் டப் செய்தது மட்டுமல்லாமல், நேரடியாக ரீமேக் செய்யவும் திட்டமிட்டுவருகிறார்கள். எண்டேமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் இணைத் தயாரிப்பாளர் லலித் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்.

உடனடியாக, இந்தப் படத்தின் பணியைத் துவங்க இருப்பதாக ஒரு தகவல். இந்நிலையில் விஜய் ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதோடு, வில்லனாக விஜய்சேதுபதியையே நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தில் வழக்கமான வில்லனாக இல்லாமல் கொஞ்சம் நடிப்பில் வெரைட்டிக் கொடுத்திருப்பார் விஜய்சேதுபதி. அவருக்கு மாற்று என யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை என்றே கருதுகிறதாம் தயாரிப்பு தரப்பு. அதனால், விஜய்சேதுபதியையே இந்தியிலும் நடிக்கவைக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அதோடு, இந்தியில் தற்பொழுது இரண்டு படங்களில் நடித்துவருகிறார் விஜய்சேதுபதி. எப்படியும் மாஸ்டர் ரீமேக் உருவாவதற்குள் அந்தப் படங்கள் வெளியாகிவிடும். இந்தியிலும் விஜய்சேதுபதியின் முகம் பரிட்சயமாகிவிடும் என்பதால், மாஸ்டர் ரீமேக் வெளியாகும் போது எந்த சிக்கலும் இருக்காது என்று யோசிக்கிறார்களாம்.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

ஞாயிறு 17 ஜன 2021