மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஜன 2021

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி இவரா?

வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி இவரா?

காமெடியன் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கான பணிகளில் மும்மரமாக இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றுவருகிறது.. ஆரம்பத்தில் பாரதிராஜா இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாகப் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாகவே விஜய்சேதுபதி படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ்குமாரின் தங்கையான பவானி ஸ்ரீ நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ.ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாக அறிமுகமானவர் பவானி ஸ்ரீ.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை மையமாக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். படத்தின் படப்பிடிப்பு இந்த ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே படத்திற்கானப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் இளையராஜா.

இந்தப் படத்தை முடித்தகையோடு, சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 16 ஜன 2021