மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

மாஸ்டர் லோகேஸுக்கும் பிரேமம் அல்ஃபோன்ஸுக்கும் இப்படியோர் ஒற்றுமையா?

மாஸ்டர் லோகேஸுக்கும் பிரேமம் அல்ஃபோன்ஸுக்கும் இப்படியோர் ஒற்றுமையா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்க்கு வில்லனாக டெரர் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

மாஸ்டர் படத்தின் முதல் பாதி வரையிலும் போதை கையாகவே வலம் வருகிறார் விஜய். மாலை 6 மணியாகிவிட்டால் புட்டியும் கையுமாகதான் இருப்பார் மாஸ்டர் ஜேடி. ஏன் குடிக்கிறார் என்கிற காரணத்தை படத்தில் சொல்லவில்லை என்றாலும், ஏன் குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களிடம் விதவிதமாக சினிமா படக் கதைகளை தன்னுடைய காதல் கதை எனச் சொல்லுவார் விஜய். அஜித்தின் காதல் கோட்டை கதையைச் சொல்லி, அப்படி தான் என் காதல் இருந்தது என்று ஒரு கதை விடுவார். அப்படி, ஒவ்வொருத்தரிடமும் ஒரு கதை சொல்லுவார்.

ஒரு காட்சியில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மலர் டீச்சர் கதையைச் சொல்லுவார். உடனே, நாயகி மாளவிகா மோகனன் இது பிரேமம் கதைதானே என சுதாரித்துக் கொள்வார்.

மலையாளத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். இந்தப் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவருக்கும் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இருவரின் சினிமா பயணமும் ஒரே இடத்திலிருந்துதான் தொடங்கியது.

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ஆந்தாலஜி படம்தான் அவியல். 2016இல் வெளியான அவியல் படத்தில் அல்போன்ஸ் ‘எலி’ எனும் கதையை இயக்கினார். அதுபோல, ‘களம்’ எனும் கதையை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இங்கு தொடங்கிய இருவரின் பயணமும் வேறு வேறு எல்லைகளில் வெற்றியாக விரிந்திருப்பது ஆச்சரியத்தக்க விஷயம்தான்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 15 ஜன 2021