மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

பொண்ணுங்ககிட்ட இருந்து மாட்ட காப்பாத்தனும்: அப்டேட் குமாரு

பொண்ணுங்ககிட்ட இருந்து மாட்ட காப்பாத்தனும்: அப்டேட் குமாரு

இன்னிக்கு மாட்டுப் பொங்கல்... கிராமங்களில் கோலாகலமா, கால் நடைகளுக்கு  நன்றி தெரிவிச்சி கொண்டாடிட்டு இருக்காங்க.. ஒரு பக்கம் பீட்டாக்கு எதிரா போராடி ஜல்லிக்கட்டுப் போட்டியும் தொடர்ந்து நடத்துறாங்க.. இதுல ஜெயிக்கிற வீரர்களுக்கு அரசு வேலைல முன்னுரிமை கொடுக்க ஒருபக்கம் பரிசீலனை வேற நடக்குதாம். இவ்வளவு சிறப்பா நடக்குற பொங்கல் பண்டிகை  வண்ண வண்ண கோலங்கள் இல்லாமல் முடிந்துவிடுமா? மாடு, கரும்பு, பொங்கல் பானைனு டிசைன் டிசைனா கோலம் வரஞ்சிருக்காங்க நம்ம தமிழ் பெண்கள்.. வழக்கமா கிராமத்துல ஒரு பழக்கம் இருக்கு.. வீடு வீடா போய் யார் வீட்டு கோலம் நல்லாருக்குனு பாப்பாங்க... அப்படி பக்கத்து வீட்டு கோலத்த பாத்த ஒருத்தரு, பீட்டாகிட்ட இருந்தே மாட்ட காப்பாத்தியாச்சு.. இந்த கோலம் போடுற பொண்ணுங்ககிட்ட இருந்து எப்ப காப்பாத்த போறோம்னு தெரிலயேனு பொலம்பிக்கிட்டு போராரு...

நீங்க அப்டேட்ட பாருங்க...

amudu

ஹாஸ்டலில் இருக்கும் பிள்ளைகள் அம்மா, அப்பாவை பார்க்க வருவதை விட, அழுக்கு மூட்டைகளை துவைப்பதற்காகவே வீட்டிற்கு வருகிறார்கள்.

சரவணன். ℳ

ஆடு பகை குட்டி உறவு என்பது காங்கிரஸை வெறுக்கும் தமிழர்கள் ராகுலை மட்டும் நேசிப்பதே...!!

பர்வீன் யூனுஸ்

இந்த பறவைக்காய்ச்சல் பீதியிலும் KFC போய் சாப்பிடுபவனே உண்மையான சிக்கன் பிரியன்.

நாகராஜ சோழன் MA.MLA

சசிகலா போன்றவர்களையும் அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும் .- குருமூர்த்தி

E.P.S ~ குட்டையை குழப்பாமல்

கொஞ்சம் சும்மா இருமய்ய...

மித்ரன்

தமிழகத்திலும் தாமரை மலரும்; இந்த மண்ணையும் மாற்றுவோம் - ஜெ.பி.நட்டா #

பகுதி செயலாளர் ~ சிக்கன் ரைஸ் கேட்டாலே கொடுக்க மாட்டேங்குறாங்க.. நீங்க மண்ணை மாத்துறேன்னு சொல்லிட்டு இருக்கிங்க..?!

எனக்கொரு டவுட்டு

பொங்கலுக்கு வந்த படத்த பத்தி மக்கள் என்ன பேசிக்கிறாங்க கோபி..

மாஸ்டர் ஈஸ்வரன் படத்தை காக்க வந்த சாமி இந்த பூமின்னு பேசிக்கிறாங்க ரமேஷ்..

PrabuG

பெண்களுக்கு நல்ல டைலர் கடையும் ஆண்களுக்கு நல்ல சலூன் கடையும் அமைந்ததாக சரித்திரமே இல்லை!!

மயக்குநன்

ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்தை நான் அறிவிக்கப் போகிறேன்!- கமல்.

'பிக்பாஸ்' வீட்டில் அடைபட்டு இருக்கிறவங்களுக்காகவா..?!

கோழியின் கிறுக்கல்!!

அதென்ன நேற்று எனக்கு வாழ்த்து சொல்லாமல்,

இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்து சொல்றீங்க?

மாட்டுப்பொங்கல்

-லாக் ஆப்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

வெள்ளி 15 ஜன 2021