மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

சசிகுமாரின் ராஜவம்சம் பட ட்ரெய்லர்!

சசிகுமாரின் ராஜவம்சம் பட ட்ரெய்லர்!

சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜவம்சம் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராஜவம்சம்’. சதீஷ், யோகிபாபு, ராதாரவி, தம்பி ராமையா, சிங்கம்புலி, ரேகா, நிரோஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சசிகுமாருக்கு கடைசியாக ரிலீஸான படம் ‘நாடோடிகள் 2’. அடுத்த ரிலீஸாக ராஜவம்சம் படம் தயாராகியிருக்கிறது. பொங்கல் தின சிறப்பாக, படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது.

இரண்டு நிமிட ட்ரெய்லரானது, முழுக்க முழுக்க பேமிலி டிராமாவாக படம் இருக்கும் என்பதை புரியவைக்கிறது. கூட்டுக்குடும்பத்தை மையமாகக் கொண்ட கதைக்களம். குடும்பக் கதையம்சம் கொண்ட இப்படத்தின் ட்ரெய்லர் சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ்.படத்துக்கு இசையமைத்திருக்கிறார். எப்படியும் அடுத்த மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கியிருக்கும் `எம்.ஜி.ஆர். மகன்' மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்யும் `கொம்பு வெச்ச சிங்கம்டா' படங்கள் தயாராக இருக்கிறது. இது போக `கத்துக்குட்டி' இரா.சரவணன் இயக்கத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் `முந்தானை முடிச்சு' ரீமேக், `திருமணம் எனும் நிக்கா' அனீஸ் டைரக்ஷனில் பகைவனுக்கும் அருள்வாய் படங்களும் சசிகுமாருக்கு லைன் அப்பில் இருக்கிறது. அதோடு, நிர்மல் குமார் டைரக்ஷனில் `நா நா' படமும் சசி லிஸ்டில் இருக்கிறது. இந்த வருடம் எப்படியும் குறைந்தது மூன்று படங்களாவது சசிகுமாருக்கு வெளியாகும்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 15 ஜன 2021