மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

நான்காவது டெஸ்ட்: இரண்டு விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்

நான்காவது டெஸ்ட்: இரண்டு விக்கெட்டுகள் எடுத்த நடராஜன்

தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று (ஜனவரி 15) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி பந்து வீச்சைத் தொடங்கியது.

பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் (1 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே - மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே (108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்கள், கேமரூன் கிரீன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வரும் தருணத்தில் தமிழக ரசிகர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 15 ஜன 2021