மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: சுக்கு பர்ஃபி!

ரிலாக்ஸ் டைம்: சுக்கு பர்ஃபி!

இஞ்சி பல மருத்துவப் பயன்களைக் கொடுப்பதைப்போலவே, காய்ந்து சுக்கான பிறகும் பல்வேறு பலன்களைக் கொடுக்கும். பலருக்கும் இஞ்சி மற்றும் சுக்கின் காரச் சுவை பிடிக்காது. ஆனால், அதன் மருத்துவ குணங்களை அவ்வளவு எளிதாகத் தவிர்க்கவும் முடியாது. இஞ்சியின் சுவையை விரும்பாதவர்கள்கூட, இஞ்சி முரபாவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த சுக்கு பர்ஃபி.

எப்படிச் செய்வது?

முதலில் இரண்டு கப் சர்க்கரை எடுத்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும்போது அதில் ஒரு டீஸ்பூன் பால் சேர்க்கவும். அப்படிச் செய்யும்போது, சர்க்கரையில் சேர்ந்திருக்கும் அழுக்கு திரண்டு வரும். அதை நீக்கவும். பாகு பதத்துக்கு வந்தவுடன், அதில் சலித்துவைத்திருக்கும் முக்கால் கப் சுக்குப்பொடியைச் சேர்க்கவும். இந்தக் கலவை, கடினமாகும்வரை நன்கு கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கலவை சேர்ந்து வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இளஞ்சூட்டுநிலைக்கு வந்தவுடன், விருப்பப்பட்ட அளவில் துண்டுகள் போட்டுப் பரிமாறலாம். சுக்கின் மஞ்சள் கலர்தான் பர்ஃபியிலிருக்கும். வேறு ஏதேனும் கலர் வேண்டுமென நினைப்பவர்கள் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். செயற்கை நிறமிகளைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு

சில நேரங்களில் சுக்கை அரைத்த பிறகும் அதன் நார்ப்பகுதி அப்படியே இருக்கும். அப்படியான சூழலில், அதை நன்கு சலித்து, உபயோகப்படுத்தவும்.

சிறப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வெள்ளி 15 ஜன 2021