மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

இந்தியாவின் 300ஆவது வீரராக நடராஜன்... சுந்தருக்கும் வாய்ப்பு!

இந்தியாவின் 300ஆவது வீரராக நடராஜன்... சுந்தருக்கும் வாய்ப்பு!

பிரிஸ்பேனில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என இருவருமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக விளையாடும் போட்டி இது என்பது தமிழர் திருநாளில் கிடைத்திருக்கும் நற்செய்தி.

இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்திருந்ததால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மயாங்க் அகர்வால், ஷர்துல் தாக்கூர் இருவரும் அணிக்குள் மீண்டும் வர தமிழக வீரர்கள் தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு முதன்முறையாக டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் இருவருமே அனைத்து ஃபார்மேட்டிலும் விளையாடக்கூடிய வீரர்களாக மாறியிருக்கிறார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக களமிறங்கும் 300ஆவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் நடராஜன். வாஷிங்டன் சுந்தர் 301ஆவது வீரர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிரிஸ்பேன் மைதானத்தில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் பல சாதனைகள் படைப்பார் என்றே எதிர்பார்க்கலாம். அதே போல் ஆல்ரவுண்டராக டெஸ்ட் அணியிலும் தனது முத்திரையைப் பதிக்க மிகப்பெரிய வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் 21 வயதேயான வாஷிங்டன் சுந்தரின் முதல் விக்கெட்டே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் என்பதால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டை இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைக்கும். ஆனால், கடந்த 28 ஆண்டுகளில் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவைத்தவிர எந்த அணியும் வென்றதில்லை. கடைசியாக 92-93 சீசனில் வெஸ்ட் இண்டீஸ் இங்கே வென்றதே சாதனை. மேலும், இந்தியா இதுவரை பிரிஸ்பேனில் வெற்றி பெற்றதேயில்லை.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியா வரலாற்றை மாற்றி எழுதுமா, அதற்கு நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் முக்கிய காரணமாக அமைவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ராஜ்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 15 ஜன 2021