மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

மாஸ்டர் முதல் நாள் வசூல் நிலவரம்?

மாஸ்டர் முதல் நாள் வசூல் நிலவரம்?

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். அனிருத் இசையில் பாடல்களும் செம ஹிட்.

தமிழகமெங்கும் குறைந்தது 900 திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருக்கும். சிறப்புக் காட்சியானது அதிகாலை 4.30 மணியில் இருந்து தொடங்கியது. விஜய் - விஜய் சேதுபதி காம்போவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் பாக்ஸ் ஆபீஸின்படி, மாஸ்டர் படத்தின் ஒரு நாள் கலெக்‌ஷன் 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்திய அளவில் எப்படியும் 35 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனைப் படைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

திரையரங்க இருக்கைகள் 50% மட்டுமே என்கிற சூழலில் இப்படியான வசூல் மிகப்பெரிய சாதனையாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறது. விடுமுறை தினமென்பதால் எல்லா பகுதிகளிலும் ஹவுஸ் ஃபுல்லாகவே படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 100% இருக்கை நிரப்ப அனுமதி கிடைத்திருந்தால், இந்த வசூல் இரட்டிப்பு மடங்கு ஆகியிருக்கும். அதோடு, சினிமா வரலாற்றிலேயே பெரிய வசூலாக இருந்திருக்கும்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 15 ஜன 2021