நான்காவது டெஸ்ட்: ஆஸி – இரண்டு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள்!

entertainment

பிரிஸ்பேனில் இன்று (ஜனவரி 15) காலை 5.30 மணிக்குத் தொடங்கிய ஆஸ்திரேலியா – இந்தியா தொடரின் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிவருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளையின்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் அடிலெய்டில் பகல் – இரவாக நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (ஜனவரி 15) காலை தொடங்கியது. இந்த டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் தொடங்கியது.

இதில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர், முகமது சிராஜ் வீசிய பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் அவுட் ஆனார். எட்டாவது ஓவரின் முதல் பந்தில் மார்கஸ் ஹாரிஸ், ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து ஐந்து ரன்களில் ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளையின்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன் களம் இறங்கி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இடம் பிடித்துள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *