மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

மீண்டும் லோகேஷ் கனகராஜ்? விஜய் 66 புது அப்டேட் !

மீண்டும் லோகேஷ் கனகராஜ்? விஜய் 66 புது அப்டேட் !

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் சிறப்பாக வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர். கொரோனா காலக்கட்டத்திலும் பெரிய ஓபனிங்குடன் விஜய் படமான மாஸ்டர் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களுடன் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கல்லூரிப் பேராசிரியரான ஜான் துரைராஜ் பணிமாற்றலாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு மாஸ்டராகச் செல்கிறார். அங்கு நடக்கும் அட்டூழியங்களை ஒழித்து, சிறுவர்களை சீர் திருத்தினாரா என்பதே மாஸ்டர் பட கதை. அதற்குள் மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. விஜய் மற்றும் விஜய்சேதுபதி என இருவருக்குமே சமமான ரோல். இரண்டு பேருமே படத்தில் அசத்தியிருக்கிறார்கள். ஜாலியான ஒரு கமர்ஷியல் படமாக வெளியாகியிருக்கிறது மாஸ்டர்.

அடுத்ததாக, விஜய் 65வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில் டிராவலாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அடுத்து கலந்துகொள்ள இருக்கிறார் விஜய். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் இணைகிறார் விஜய் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. விஜய்யின் 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூட ‘விஜய் சாருக்கு இன்னொரு கதையும் ரெடியாக இருப்பதாகவும், மீண்டும் எப்பொழுது விஜய் அழைத்தாலும் ரெடியாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்ததும் நினைவு கூறத்தக்கது. அதனால், மீண்டும் லோகேஷ் கனகராஜ் டீமுடன் ஒரு படம் பண்ணலாம் என யோசித்துவருகிறாராம். அதோடு, மாஸ்டர் பட இணைத்தயாரிப்பாளர் லலித்குமார், விஜய் 66 படத்தை தயாரிக்கலாம் என்று தெரிகிறது. எல்லாம் சரியாக நடந்தால், மீண்டும் ஒருமுறை மாஸ்டர் கூட்டணியில் இன்னொரு படம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

விஜய் 65 படமானது வருகிற மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எப்படியும் வரும் தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 14 ஜன 2021