மட்டன் ரைசுன்னா மோடி பிஏவை கூப்பிடுவானா? அப்டேட் குமாரு

என்னஜி இது வம்பாப் போச்சு...சாதாரண சிக்கன் ஃப்ரைடு ரைஸுக்கு காசு கேட்டா அமித் ஷா பிஏவுக்கு போன் பண்ணி ஆயிரம் பேரை வரச் சொல்லுவேன்றானுங்க. ஆனா உண்மையிலேயே அமித் ஷா வர்றாரு வாப்பானு சொன்னா கூட்டம் சேர்க்க மாட்டேங்குறாங்க. சரிங்க ஜி... இன்னொரு டவுட். சிக்கன் ஃப்ரைடு ரைசுக்கு அமித் ஷா பிஏவுக்கு போன் பண்ணா... மட்டன் ப்ரைடு ரைசுன்னா மோடி பி.ஏ.வுக்கு போன் போடுவாங்களாஜி....நெக்கலு ஜி...நெக்கலு
நீங்க அப்டேட்டை பாருங்க.
பர்வீன் யூனுஸ்
100 ரூபாய் நிரப்பப்பட்ட ATM கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
ரஹீம் கஸ்ஸாலி
மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி #இவர்களை அமைச்சர்கள் என்று அழைப்பதைவிட, விகடகவி என்று அழைக்கலாம் போல...!
நாகராஜ சோழன் MA.MLA
சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர் - கோகுல இந்திரா புகழாரம்
கழகத்துகுள்ள கலகம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க ஒவர்...ஒவர்...
ஜோக்கர்..
எப்ப வரும் எப்ப வரும்னு ஏங்க வச்ச காலம் போயி,
ஏண்டா வருது ஏண்டா வருதுன்னு நினைக்க வைக்குறதெல்லாம், வாழ்க்கையோட டிசைன்ல இருக்கு.
"பண்டிகைகள்"
PrabuG
பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி.
ஆமா. பழைய கொரோனா போயிட்டு புது கொரோனா வந்துடுச்சு...
தர்மஅடி தர்மலிங்கம்
மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்திருப்பது தமிழகம் தான்; எல்.முருகன்!
பயனடைந்ததா.. பாதிப்படைந்ததா..??
டீ இன்னும் வரலை...
எந்த வருஷமும்
இல்லாம இந்த வருஷம்...
‘பொங்கலுக்கு’
சிக்கன் ரைஸ் பேமஸ் ஆகியிருக்கு..
மித்ரன்
இன்னா பாய்... காசெல்லாம் கேட்குற..??
அமித்ஷா PA க்கு ஃபோன் போடனுமா..?!
மயக்குநன்
பொங்கல் விழாவை 'சமத்துவப் பொங்கலாகக்' கொண்டாடுவோம்!- மு.க.ஸ்டாலின்.
இப்ப... 'பஞ்சு' பொங்கல்தான் ட்ரெண்டிங் தலைவரே..!
கோழியின் கிறுக்கல்!!
Mask கொரோனாவில் இருந்து காக்க பயன்படுகிறதோ இல்லையோ,
பொதுக் கழிப்பிடத்தின் துர்நாற்றத்தில் இருந்து கண்டிப்பாக காப்பாற்றுகிறது!!
வரும்பொங்கல் அன்று உங்கள் கவலைகள் நித்யானந்தா போல இருக்குமிடம் தெரியாமல் போகட்டும்🧕🏻
சந்தோஷங்கள் வெங்காய விலை போல அதிகரிக்கட்டும் 🌰
பிரச்சனைகள் மல்லையா போல கண்காணா இடத்திற்கு செல்லட்டும்🍺
துன்பங்கள் மக்கள் நீதி மையம் போல இடதும் இன்றி வலதும் இன்றி நடுத்தெருவில் நிற்கட்டும்....🤝
தோல்விகள் ரஜினி அரசியல் போல 25 ஆண்டுகள் ஆனாலும் வரேன் வரேன் ணு சொல்லி வராமலே இருக்கட்டும்..
-லாக் ஆஃப்