மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

வலிமை புது அப்டேட்!

வலிமை புது அப்டேட்!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. படமானது பூஜையுடன் தொடங்கியதைத் தவிர வேறு எந்த அப்டேட்டையும் தரவில்லை வலிமை டீம். அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட படக்குழு அறிவிக்கவில்லை. அதனால், சோஷியல் மீடியாவில் ‘வலிமை அப்டேட்’ கேட்டு ரசிகர்கள் கதறி வருகிறார்கள்.

சோஷியல் மீடியாவில் தொடங்கி, பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அனைவரிடமும் ‘வலிமை அப்டேட்’ கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், அப்டேட் கேட்பதற்கு புது ரூட்டை கையாண்டிருக்கிறார் அஜித் ரசிகர் ஒருவர். ஆட்டோ ஓட்டுநரான அஜித் ரசிகர் ஒருவர், ஆட்டோவின் பின்புறம் ‘வெயிட்டிங் ஃபார் வலிமை அப்டேட்’ என எழுதியிருக்கிறார். அந்த ஆட்டோவின் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்டேட் இல்லையென்றாலும், வலிமை படம் குறித்த செய்தி பரபரப்பாகி வருகிறது.

பொங்கல் தினத்துக்கு வலிமை டீமிடமிருந்து அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நமக்குக் கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், அஜித்துடன் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருக்கிறார். இதன்மூலம், ஜான் ஆபிரகாம் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் வலிமை.

வலிமை டீமானது பைக் சண்டைக் காட்சிகளுக்காக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியாவில் படப்பிடிப்பை எடுத்துவருகிறது. அதில் வரும் பைக் காட்சிகளில் ஜான் ஆபிரகாம் நடிக்கலாம் என்று தெரிகிறது. கூடவே, தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவின் பைக் ரேஸிங் காட்சிகளும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தை மே 1 அஜித் பிறந்த தினத்துக்கு வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டு சீக்கிரமாகப் படப்பிடிப்பை முடிக்க பணியாற்றி வருகிறார்கள்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 12 ஜன 2021